MAP

அருள்தந்தை வர்க்கீஸ் கிளிட்டஸ் (MMI) பாப்புவா நியுகினி மக்களுடன் அருள்தந்தை வர்க்கீஸ் கிளிட்டஸ் (MMI) பாப்புவா நியுகினி மக்களுடன்  

நேர்காணல் – பாப்புவா நியுகினி மறைப்பணி அனுபவம்

அருள்தந்தை வர்க்கீஸ் கிளிட்டஸ் (MMI) அவர்கள் 2018-ஆம் ஆண்டு பாப்புவா நியுகினி என்னும் தீவு நாட்டிற்கு மறைப்பணியாற்றச் சென்று அங்குள்ள புனித ஸ்தேவான் கத்தோலிக்க ஆலயத்தின் பங்குக்குருவாக இன்று வரை பணியாற்றி வருகின்றார்.
நேர்காணல் - அருள்தந்தை வர்க்கீஸ் கிளிட்டஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

மறைப்பணி என்பது எல்லாருக்குமானது அது எவ்விதச் சோர்வுமின்றி மீண்டும் மீண்டும் மக்களை நோக்கிச் சென்று அவர்கள் இறைவனைச் சந்திக்க வர அழைப்பதாகும் என்பதை 2024ஆம் ஆண்டு மறைப்பணி தினத்திற்கான செய்தியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசுவின் நற்செய்தி அறிவிப்புக்காக தங்களிடம் இருப்பதையெல்லாம் துறந்து கண்டம், நாடு, ஊர், மொழி, உறவுகள் என அனைத்தையும் விடுத்து மறைப்பணியாற்றும் மறைப்பணியாளர்களுக்கு எவ்வளவு நன்றி எடுத்துரைத்தாலும் சொல்லில் மாளாது. வாழ்வின் அனைத்துச் சூழல்களிலும் நற்செய்தியின் சான்றுகளாக ஒவ்வொரு கிறிஸ்தவரும் செயல்படவேண்டும் என்று வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களுக்கிணங்க நாமும் மறைப்பணியாளர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம். அவ்வகையில் பாப்புவா நியு கினி எனும் சிறிய தீவு நாட்டில் மறைப்பணியாற்றி வரும் அருள்தந்தை வர்க்கீஸ் கிளிட்டஸ் அவர்கள் இன்று தனது மறைப்பணி அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்.

அமலமரி தூதுவர் சபையின் (MMI) அருள்பணியாளராக கடந்த 2011-ஆம் ஆண்டு அருள்பொழிவு செய்யப்பட்ட தந்தை வர்க்கீஸ் கிளிட்டஸ் அவர்கள், புனேயில் இறையியலில் இளங்கலைப்பட்டமும், கோவூரில் தத்துவயியலில் முதுகலைப்பட்டமும் பெற்றவர். ஆப்ரிக்காவின் எத்தியோப்பியா பகுதிக்கு மறைப்பணியாளராக முதன்முதலில் அனுப்பப்பட்ட தந்தை அவர்கள் 6 ஆண்டுகள் அங்குப் பணியாற்றினார். அதன்பின் 2018-ஆம் ஆண்டு பாப்புவா நியுகினி என்னும் தீவு நாட்டிற்கு மறைப்பணியாற்ற சென்று அங்குள்ள புனித ஸ்தேவான் கத்தோலிக்க ஆலயத்தின் பங்குக்குருவாக இன்று வரை பணியாற்றி வருகின்றார். தந்தை அவர்களை அவரது மறைப்பணி அனுபவம் பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 ஜூன் 2025, 10:09