MAP

மிரபெல்லா மறைப்பணியின் நிறுவனர் சகோதரி J.கரோலின் மிரபெல்லா மறைப்பணியின் நிறுவனர் சகோதரி J.கரோலின் 

நேர்காணல் – மிரபெல்லா மறைப்பணி அனுபவம்

கோயம்புத்தூரைச் சார்ந்த சகோதரி J. கரோலின் அவர்கள் தனது நற்செய்திப்பணிக்காக (CCBI) இலத்தீன் வழிபாட்டு முறை இந்திய கத்தோலிக்க ஆயர்கள் அவையினால் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
நேர்காணல் - சகோதரி J..கரோலின்

மெரினா ராஜ் – வத்திக்கான்

இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் அவரது அன்பின் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்பட்டவர்கள். அவ்வகையில் நமது வாழ்வாலும் வார்த்தையாலும், நாம் அறிவிக்கும் நற்செய்தியின் அன்பின் உயிருள்ள அடையாளங்களாக மாற வேண்டியது இன்றியமையாதது என்று வலியுறுத்துவார் திருத்தந்தை பிரான்சிஸ். “புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பதன் வழியாக, கடவுளைச் சந்திப்பது இயலக்கூடியதா?” என்று பல்வேறு கலக்கங்களும் சவால்களும் நம்மைச் சூழும் வேளையில் இக்கட்டான சூழலில் இறை அனுபவம் பெற்றவர் சகோதரி J. கரோலின். அந்த அனுபவத்தையே தனது மறைப்பணி வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு புதிய வழிகளில் நற்செய்தியை சிறப்புடன் அறிவித்து வருபவர். இன்றைய நமது நேர்காணலில் தனது மிரபெல்லா மறைப்பணி அனுபவங்கள் குறித்தக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்.

கோயம்புத்தூரைச் சார்ந்த சகோதரி J.கரோலின் அவர்கள் தனது நற்செய்திப்பணிக்காக (CCBI) இலத்தீன் வழிபாட்டு முறை இந்திய கத்தோலிக்க ஆயர்கள் அவையினால் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். ஏறக்குறைய 17 ஆண்டுகளாக புதிய வழிகளில் நற்செய்தியை அறிவித்து வரும் மிரபெல்லா மறைப்பணி பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஜூன் 2025, 11:00