நேர்காணல் - மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் யூபிலி ஆண்டு
மெரினா ராஜ் – வத்திக்கான்
நமது வாழ்க்கைப் பயணத்தில் கடவுள் நமக்கு அளிக்க இருக்கும் சிறப்பானக் கொடையை விரும்பிக் கேட்டுப்பெற்றுக்கொள்ளவும், நமது பழைய பாவ வாழ்வைத் துறந்து புதிய வாழ்வைக் கடவுளில் மீண்டும் தொடங்குவதற்கும் கொடுக்கப்பட்ட ஆண்டே இந்த யூபிலி ஆண்டு. இந்த எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டில் இறைவனை நோக்கிய பயணத்தின் திருப்பயணிகளாக நாம் இறைவன் முன் நிற்கின்றோம். எதிர்நோக்கு நம்மை பொறுத்து அல்ல, மாறாக, அது கடவுளின் அரசைப் பொறுத்தது. “எதிர்நோக்கு என்னும் இறையியல் பண்பானது, ஒருவரிடம் இருக்கின்றது மற்றவரிடம் இல்லை என்று கூறும் பழக்கவழக்கமோ, பண்பு நலனோ அல்ல மாறாக, எதிர்நோக்கு என்பது இறைவனிடமிருந்து வரக்கூடிய ஓர் ஆற்றல் நாம் கேட்கவேண்டிய ஆற்றல்“ என்று வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளுக்கிணங்க இந்த எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டு நமக்கு விடுக்கும் செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்பணி ராஜேஷ் ரவி. நியூயார்க் உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்தவர். நியூயார்க்கின் குயின்ஸில் உள்ள புனித ஜான்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரிப் படிப்பை முடித்துள்ள தந்தை அவர்கள் நியூயார்க் புனித யோசேப்பு குருமடத்தில் இறையியல் படிப்பை பயின்றுள்ளார். தந்தை அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் மனமாற்றத்திற்கு அழைப்புவிடுக்கும் யூபிலி ஆண்டு பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்