MAP

துணை அரசுத் தலைவர் பதவிவிலகக் கோரி மக்கள் போராட்டம் துணை அரசுத் தலைவர் பதவிவிலகக் கோரி மக்கள் போராட்டம்   (ANSA)

பிலிப்பீன்ஸ் தலத்திருஅவைத் தலைவர்கள் கண்டனம்!

பிலிப்பீன்ஸ் துணை அரசுத் தலைவர் சாரா டுடெர்ட்டே மீதான பதவி நீக்க தீர்மானம் தாமதமானதற்கு அதன் தலத்திருஅவைத் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகவும் ஊழல் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட பிலிப்பீன்சின் துணை அரசுத் தலைவர் சாரா டுடெர்ட்டே மீதான பதவி நீக்கத்தை தாமதப்படுத்தியதற்காக தேசிய நாடாளுமன்றத்தை விமர்சிக்க அதன் கத்தோலிக்கத் தலத்திருஅவைத் தலைவர்கள் ஆர்வலர்களுடன் இணைந்துள்ளனர் என்று கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.

"குற்றச்சாட்டு விசாரணை செயல்முறை தொடர்வது கட்டாயமாகும் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மக்களின் விருப்பத்தை மீறக்கூடாது," என்றும், ஜூன் 11, இப்புதனன்று, 'ஒரே நம்பிக்கை, ஒரே நாடு, ஒரே குரல்' என்ற பல்துறவு சபைகள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

ஜூன் 11, இப்புதனன்று, தலைநகர் மணிலாவில் உள்ள செனட் கட்டிடத்தின் முன் பல்வேறு குடிமைச் சமூக அமைப்புகள் மற்றும் நம்பிக்கை சார்ந்த குழுக்களைச் சேர்ந்த ஏறத்தாழ 5,000 பேர் பேரணி ஒன்றை நடத்தி, சாரா டுடெர்ட்டே மீதான பதவி நீக்கத்தை தாமதப்படுத்துவதாக அதிருப்தி தெரிவித்தனர் என்றும் அச்செய்திக் குறிப்பு குறிப்பிட்டுள்ளது.

ஜூன் 10, இச்செவ்வாயன்று, பதவி நீக்க நீதிமன்றத்தால் டுடெர்ட்டேவை பதவி நீக்கம் செய்யத் தேவையான பிரிவுகளுடன் கூடிய தீர்மானத்தை மேல்சபை நிறைவேற்றத் தவறியதற்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் அச்செய்திக் குறிப்பு உரைக்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 ஜூன் 2025, 13:02