MAP

WCC எனப்படும் உலக கிறிஸ்தவச் சபையினர் WCC எனப்படும் உலக கிறிஸ்தவச் சபையினர்  

நலத் திட்டங்களுக்கு உதவிகோரும் உலக கிறிஸ்தவச் சபைகள்!

உயிர்களைக் காப்பாற்றும் நலத் திட்டங்களிலிருந்து முக்கிய உலக நன்கொடையாளர்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதால், இலட்சக்கணக்கான பின்தங்கியிருக்கும் மக்கள் ஆபத்தில் உள்ளனர் - WCC எனப்படும் உலகக் கிறிஸ்தவச் சபைகள்

சுஜிதா சுடர்விழி -வத்திக்கான்

மே 28-29 வரை நைரோபியில் கூடிய WCC எனப்படும் உலகக் கிறிஸ்தவச் சபைகள் அமைப்பு எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படும் தங்கள் மக்கள் குறித்த உலகளாவிய நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்ததாகக் கூறியுள்ளது ICN எனப்படும் செய்தி நிறுவனம்.

நாட்டின் செல்வமாகிய மக்கள் நோய்வாய்பட்டிருக்கும்போது அந்நாடு  பலவீனமடைகிறது என்றும்,  மக்களின்  நலத்தில் முதலீடு செய்வது நமது நாடுகளின் நடுநிலை தன்மையையும், வளமை மற்றும் சமூகக் கட்டமைப்பின் அக்கறையையும் காட்டுகிறது என்றும் உலக கிறிஸ்தவச் சபைகள் எடுத்துக்காட்டியுள்ளதாகக் கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

மேலும் நலத்துறையில் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது நல்லாட்சிக்கு அழகு மட்டுமல்ல, அது நம்பிக்கை மற்றும் நீதியின் செயல் என்றும், இந்த நோயினால் பாதிக்கப்படக் கூடியவர்களைப் பராமரிப்பதும் அவர்களை குணப்படுத்துவதும் புனிதமான கடமைகள் என்பதையும் WCC சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது அச்செய்தி நிறுவனம்.

நன்கொடை வழங்கும் பல்வேறு நாடுகள் மற்றும் தனியார் துறை ஆகியவை உலகளாவிய நிதியத்திற்கான தங்கள் நன்கொடைகளை  அதிகரிக்க வேண்டும்  என்றும்,  இதனால் ஏற்பட்ட இடைவெளிகளை சரிசெய்வதற்கும், மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்கும், வாழ்க்கையின் புனிதத்தைப் பாதுகாப்பதற்கும் இது உதவும் என்றும் WCC தெரிவித்ததையும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்திக் குறிப்பு.

2023-ஆம் ஆண்டில், UNAIDS நிறுவனம் 13 இலட்சம் புதிய எய்ட்ஸ் தொற்றுகள் மற்றும் 6,30,000 எய்ட்ஸ், 2,650 இலட்சம் மலேரியா மற்றும் 125 இலட்சம் காசநோய் தொடர்பான இறப்புகள் பதிவு செய்துளதாகவும்  அவற்றில் 75 சதவீதம் பேர்  ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 ஜூன் 2025, 14:56