மெக்சிகோவில் காணாமல்போனோருக்காக குரல் கொடுக்கும் திருஅவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அண்மைக் காலங்களில் மெக்சிகோ நாட்டில் அதிகரித்துவரும் குற்ற வன்முறைகளால் காணாமல்போயுள்ள பல ஆயிரக்கணக்கான மக்களைக் கண்டுபிடிப்பதில் அரசியல் தலைவர்களும் சமூகத்தின் அனைத்துத் துறைகளில் இருப்போரும் கலந்துரையாடலுக்கும் ஒத்துழைப்புக்கும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது தலத்திருஅவை.
அரசியல் தலைவர்களுக்கும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இவ்வழைப்பை விடுத்துள்ள மெக்சிகோ பெருமறைமாவட்டத்தின் துணை ஆயர் Francisco Javier Acero அவர்கள், தங்கள் குழந்தைகள் காணாமல் போயுள்ள பெற்றோர்கள் 200க்கும் மேற்பட்ட குழுக்களாகப் பிரிந்து காவல்துறையின் மீது நம்பிக்கையின்றி தாங்களேத் தேடிவருவதாகவும், பங்குத்தளங்களில் அமைக்கப்பட்டிருக்கும் மையங்கள் வழி இதனைச் செயல்படுத்துவதாகவும் கூறினார்.
மெக்சிகோ உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2006ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 1இலட்சத்து 25ஆயிரம்பேர் காணாமல்போயுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகவும், உறுப்பு கடத்தல் காரணமாகவும் எண்ணற்ற குழந்தைகள் உட்பட பலர் காணாமல் போயுள்ள நிலையில், உறவினர்களை இழந்துத் தவிக்கும் குடும்பங்களோடு இணைந்து சேவையாற்றி வருகிறது தலத்திருஅவை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்