MAP

கொலராடோவின் போல்டரில் தாக்குதல் நடந்த இடத்தில் இறைவேண்டல் செய்யும் மக்கள் கொலராடோவின் போல்டரில் தாக்குதல் நடந்த இடத்தில் இறைவேண்டல் செய்யும் மக்கள்   (2025 Mark Makela)

வெறுப்பைத் தூண்டும் வன்முறையை முடிவுக்குக் கொணர்வோம்!

இஸ்ரேலியப் பிணையக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதல் பற்றிய செய்தியால் வருத்தமடைந்துள்ள நிலையில் ‘வெறுப்பை மட்டுமே தூண்டும்’ வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர டென்வர் பேராயர் அழைப்பு விடுத்துள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வெறுப்பை மட்டுமே தூண்டும்’ வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று அறிக்கையொன்றில் அழைப்புவிடுத்துள்ளார் டென்வர் பேராயர் சாமுவேல் அக்விலா.

இஸ்ரேலியப் பிணையக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதல் பற்றிய செய்தியால் வருத்தமடைந்துள்ள நிலையில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ள பேராயர் அக்விலா அவர்கள், இந்தத் தாக்குதல், நமது யூதச் சகோதரர் சகோதரிகள் மீது குறிவைக்கப்பட்ட ஒன்று என்றும் கூறியுள்ளார்.

இந்தக் கொடூரமான தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இறைவேண்டல் செய்யுமாறு விண்ணப்பித்துள்ள ஆயர், "இத்தகைய வெறுப்புக்கு எதிராக ஆறுதல், குணப்படுத்துதல் மற்றும் அமைதியைக் கொண்டுவர நாங்கள் இறைவனிடம் வேண்டுகிறோம் என்றும், ஒருவரையொருவர் அன்புகூர  அழைக்கும் கடவுளின் குரலைக் கேட்போமாக என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காசாவில் ஹமாஸ் தீவிரவாதக் குழுவால் இன்னும் விடுவிக்கப்படாமல் பிணையக்கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள்ளவர்களை நினைவுகூரும் நோக்கில் ஜூன் 1, இஞ்ஞாயிறன்று, நடத்தப்பட்ட பேரணியின்போது, "பாலஸ்தீனத்தை விடுவிப்போம்" என்று கூச்சலிட்டுக்கொண்டு வந்த 45 வயது நிரம்பிய எகிப்திய நபர் ஒருவர், கொலராடோவின் போல்டர் நகர மையத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது தற்காலிகத் தீக்குண்டுகளை வீசினார். இந்தத் தாக்குதலில் பன்னிரண்டு பேர் காயமடைந்தனர். அவர்களில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் நான்கு பேர் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஜூன் 2025, 12:54