MAP

தானியேலுக்கு வணக்கம் செலுத்தும் அரசர் தானியேலுக்கு வணக்கம் செலுத்தும் அரசர்  

தடம் தந்த தகைமை : அரசரால் தானியேல் ஆளுநராக ஏற்படுத்தப்படல்!

தானியேலின் வேண்டுகோளின்படி சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைப் பாபிலோன் நாட்டின் புறப்பகுதிகளுக்குப் பொறுப்பாளராக நியமித்தான்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தனது கனவு குறித்த தானியேலின் விளக்கத்தைக் கேட்ட அரசன் நெபுகத்னேசர் அவரது அடிகளில் வீழ்ந்து வணங்கினான்; அவருக்குக் காணிக்கைப் பொருள்களைப் படைத்துத் தூபமிடுமாறு ஆணையிட்டான். மேலும், அரசன் தானியேலை நோக்கி, “நீர் வணங்கும் கடவுளே தெய்வங்களுக்கெல்லாம் கடவுள்; அரசர்களுக்கெல்லாம் ஆண்டவர்; அவர் ஒருவரே மறைபொருள்களை எல்லாம் வெளிப்படுத்த வல்லவர். இது உண்மையிலும் உண்மை; ஏனெனில் உம்மால் மட்டுமே இம்மறைபொருளை விளக்கிக் கூறமுடிந்தது” என்றான். பின்பு அரசன் தானியேலை உயர்ந்த முறையில் சிறப்பித்து அவருக்குப் பரிசில் பல தந்து, பாபிலோன் நாடு முழுவதற்கும் அவரை ஆளுநராக ஏற்படுத்தினான்; பாபிலோனிய ஞானிகள் அனைவர்க்கும் தலைவராகவும் நியமித்தான். மேலும் தானியேலின் வேண்டுகோளின்படி சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைப் பாபிலோன் நாட்டின் புறப்பகுதிகளுக்குப் பொறுப்பாளராக நியமித்தான். தானியேலோ அரசனது அவையில் தொடர்ந்து பணியாற்றினார்.

அரசர் நெபுகத்னேசர் உலகில் எங்கணுமுள்ள எல்லா இனத்தார்க்கும் நாட்டினர்க்கும் மொழியினருக்கும் அறிவிப்பது: உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக! மாட்சிமிகு கடவுள் எனக்காகச் செய்தருளிய அடையாளங்களையும் விந்தைகளையும் வெளிப்படுத்துவது நலமென எனக்குத் தோன்றுகிறது. அவர் தந்த அடையாளங்கள் எத்துணைப் பெரியன! அவர் ஆற்றிய விந்தைகள் எத்துணை வலியன! அவரது அரசு என்றுமுள அரசு! அவரது ஆட்சியுரிமை வழிவழி நிலைக்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 ஜூன் 2025, 13:53