MAP

அரசரிடம் கனவை விளக்கும் தானியேல் அரசரிடம் கனவை விளக்கும் தானியேல்  

தடம் தந்த தகைமை : மீண்டும் நெபுகத்னேசரை சந்திக்கும் தானியேல்!

அரசருக்கு அதன் உட்பொருளைத் தெரிவிக்கவும் உமது இதயத்தின் நினைவுகளை நீர் அறிந்துகொள்ளவும் அவை எனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்றார் தானியல்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அரியோக்கு தானியேலை, அரசன் முன்னிலைக்கு விரைவாய் அழைத்துச் சென்று, அரசனிடம், “அரசரே! சிறைப்பட்ட யூதா நாட்டினருள், அரசருடைய கனவின் உட்பொருளை விளக்கிக் கூறவல்ல ஒருவனைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்றான். அரசனோ ‘பெல்தசாச்சர்’ என்று பெயரிடப்பட்ட தானியேலைப் பார்த்து, “நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு விளக்கிக் கூற உன்னால் இயலுமா?” என்று கேட்டான்.

தானியேல் அரசனுக்குச் சொன்ன மறுமொழி: அரசர் கேட்கும் மறைபொருளை அரசருக்கு அறிவிக்க எந்த ஞானியாலும் மாயவித்தைக்காரனாலும் மந்திரவாதியாலும் சோதிடனாலும் இயலாது. ஆனால் அரசரே! மறைபொருள்களை வெளிப்படுத்தும் விண்ணகக் கடவுள் பிற்காலத்தில் நிகழப் போவதை நெபுகத்னேசர் என்னும் உமக்குத் தெரிவித்துள்ளார்; நீர் கண்ட கனவும், நீர் படுத்திருந்த பொழுது, உம் மனக்கண் முன்னே தோன்றின காட்சிகளும் பின்வருமாறு: அரசரே! நீர் படுத்திருந்த பொழுது, எதிர்காலத்தில் நிகழப்போவதைப் பற்றி நினைக்கத் தொடங்கினீர்; அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் இனி நடக்க விருப்பதை உமக்குக் காண்பித்தார். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் மற்றெல்லா உயிர்களையும்விட நான் ஞானம் மிக்கவன் என்பதால் எனக்கு வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் அரசருக்கு அதன் உட்பொருளைத் தெரிவிக்கவும் உமது இதயத்தின் நினைவுகளை நீர் அறிந்துகொள்ளவும் அவை எனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஜூன் 2025, 11:31