MAP

படிப்பினைகள் வழங்கும் இயேசு படிப்பினைகள் வழங்கும் இயேசு  

தடம் தந்த தகைமை - நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே

உலகம் நெறிபிறழ்கின்றபொழுது அதனைக் கைநெகிழ்ந்து விடுபவரல்லர் நம் கடவுள். ஆனால் மாந்தராம் நமக்குக் கடவுளைப் புறக்கணிப்பதும், தேவைகளுக்கு மட்டும் அவரை நாடுவதும் நம் கைவந்த கலையாகிப் போனது.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க  இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? உம் மகனை இங்கே கொண்டு வாரும், (லூக் 9:41) என்றார் இயேசு.

உலகம் நெறிபிறழ்கின்றபொழுது அதனைக் கைநெகிழ்ந்து விடுபவரல்லர் நம் கடவுள். எப்படியேனும் கைதூக்கிக் காப்பாற்றும் கரிசனையுணர்வு மிக்கவர். படைப்பின் தொடக்கமுதலே கடவுள் இதனையே கையாண்டு வருகின்றார். ஆனால் மாந்தராம் நமக்குக் கடவுளைப் புறக்கணிப்பதும், தேவைகளுக்கு மட்டும் அவரை நாடுவதும் நம் கைவந்த கலையாகிப் போனது. இந்த மனநிலையோடு தம் மகனுக்காக மன்றாட வந்த ஒருவரிடம் இயேசு பொழியும் வார்த்தைகள் அச்சூழலுக்கேற்ப ஆக்ரோஷமானவையே.

ஏனென்றால் நம் கடவுள் நீடிய பொறுமையுள்ளவர் (நெகே 9:17). தம் மக்களாம் நம்மைப் பொன்போலக் காத்து வரும் பொறுப்பாளர். எல்லாரும் எல்லாம் பெற்று வாழ வேண்டுமென்ற பொதுநல உணர்வு கொண்டவர்.

அதேவேளையில் நாதியற்றவர்களுக்கு நீதி மறுக்கப்படுகையில் பொங்கி எழுபவர். பொல்லாரை மிகவே வெறுப்பவர். அந்த அன்புக் கடவுளின் குணங்களை நம்முள் கொண்டு வாழ்வதும் செயற்படுவதும் அவர் நமக்குக் கொடுத்தக் கட்டளை. அதனை நிறைவேற்றவில்லையெனில் நாமும் சீரழிந்த தலைமுறையே!

இறைவா! பொறுமைக்கு நிகர் நீரே. அந்த உம் பொற்குணத்தின் ஒரு துளி என் இதயம் விழுவதாக.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஜூன் 2025, 13:09