MAP

அரசர் தாவீது அரசர் தாவீது  

தடம் தந்த தகைமை – ஆண்டவரின் சினத்திற்கு ஆளான அரசர் தாவீது

“நீ தாவீதிடம் சென்று, ‘ஆண்டவர் கூறுவது இதுவே; நான் மூன்று காரியங்களை உனக்குமுன் வைக்கிறேன்; அவற்றுள் ஒன்றை நீ தெரிந்து கொள்; அவ்வாறே உனக்குச் செய்வேன்’ என்று சொல்” என்றார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அரசர் தாவீதின் இக்கணக்கெடுப்பு கடவுளின் பார்வையில் தீயதெனப்பட்டதால், அவர் இஸ்ரயேலைத் தண்டித்தார். தாவீது கடவுளிடம், “நான் இந்தச் செயலைச் செய்தபடியால் பெரும் பாவம் செய்தேன். உம் அடியேனை மன்னியும், மதியீனமாய்ச் செயல்பட்டேன்” என்று சொன்னார். அப்போது தாவீதுக்குக் காட்சியாளராய் இருந்த காத்து கூறியதாவது; “நீ தாவீதிடம் சென்று, ‘ஆண்டவர் கூறுவது இதுவே; நான் மூன்று காரியங்களை உனக்குமுன் வைக்கிறேன்; அவற்றுள் ஒன்றை நீ தெரிந்து கொள்; அவ்வாறே உனக்குச் செய்வேன்’ என்று சொல்” என்றார். காத்து தாவீதிடம் சென்று “ஆண்டவர் கூறுவது இதுவே; ‘நீயே தேர்ந்துகொள்; மூன்று ஆண்டுப்பஞ்சமா? உன் எதிரிகளின் வாளுக்கு அஞ்சி மூன்று மாதம் அவர்கள்முன் ஓடுவதா? இஸ்ரயேல் நாடெங்கும் சாவுண்டாகும்படி ஆண்டவரின் தூதர் மூன்று நாள்கள் நாட்டில் வருவிக்கும் ஆண்டவரின் வாளான கொள்ளை நோயா?’ இப்போது, என்னை அனுப்பியவருக்குப் பதிலளிக்குமாறு உம் முடிவைக் கூறும்” என்றார்.

தாவீது காத்தை நோக்கி, “நான் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன்; ஆண்டவர் கையில் நான் சரண் அடைவதே மேல்! ஏனெனில், அவர் மிகவும் இரக்கம் உள்ளவர். மனிதர் கையில் நான் அகப்படக்கூடாது” என்றார். எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் கொள்ளை நோயை அனுப்பினார். அதனால் இஸ்ரயேலருள் எழுபதினாயிரம் பேர் மாண்டனர். பின்னர், எருசலேமை அழிக்கக் கடவுள் ஒரு தூதரை அனுப்பினார். எனினும், அவர் அவ்வாறு அழிக்கும்போது ஆண்டவர் அந்தத் தீங்கைப் பார்த்து மனம் வருந்தி, அழித்துக் கொண்டிருந்த தூதரைப் பார்த்து, “போதும் உடனே நிறுத்து!” என்று கட்டளையிட்டார். அந்நேரம் ஆண்டவரின் தூதர் எபூசியனான ஒர்னானின் களத்தருகில் நின்று கொண்டிருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 ஜூன் 2025, 10:05