MAP

இயேசுவும் சீடரும் இயேசுவும் சீடரும் 

தடம் தந்த தகைமை : நீர் எங்கே போகிறீர்?

இயேசு குறிப்பிடும் இடம் நலமும் வளமும் மகிழ்வும் சூழ்ந்த சொர்க்கம் அன்று சிலுவையும், பாடுகளும், துடிதுடிக்கக் கொல்லும் கல்வாரிக் குன்றுமே அது.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

சீமோன் பேதுரு, ஆண்டவரே நீர் எங்கே போகிறீர்? என கேட்க, இயேசுவோ, நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது. பின்னரே என்னைப் பின்தொடர்வாய்(யோவா 13:36) என்றார்.

இயேசுவின் பிரியாவிடை உரையாடல் அவரது பரிவின் பரிமாணங்கள். ‘நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது’ (யோவா 13:33) என்ற சொற்றொடர் சீடர்களின் உள்ளத்துக்குள் சொல்லொண்ணா சோகத்தைச் சுரந்தது. அதனின்று எழுந்ததே பேதுருவின் கேள்வி. இயேசு குறிப்பிடும் இடம் நலமும் வளமும் மகிழ்வும் சூழ்ந்த சொர்க்கம் அன்று சிலுவையும், பாடுகளும், துடிதுடிக்கக் கொல்லும் கல்வாரிக் குன்றுமே அது. தனது போதனைகளும் செயல்பாடுகளும் மாயமான ஆன்மிக மறுமலர்ச்சியை உருவாக்கிட வேண்டுமென இயேசு விரும்பவில்லை. அவரது கனவு மனிதரின் அக-புற, தனி-பொது, ஆன்மிக-அரசியல், பொருளாதார - பண்பாட்டுத் துறைகளில் எழும் அடிப்படை மாற்றம். அந்த மாற்றத்தில் மாந்தர் யாவரும் நம்பிக்கைப் பெற்றெழ வேண்டும். அதற்கெனத் தன் உயிரையே தானமாக்கத் துணிந்தார். அத்துணிவு அவரைப் பின்பற்றும் எல்லாரிலும் இருக்க வேண்டும் என ஆசையும் கொண்டார். தங்களது விருப்பத்தைக் கடவுளின் விருப்பத்தில் தொலைத்தவர்க்கு வாழ்வில் ஏமாற்றம் என ஏதுமில்லை.

இறைவா! உம் திருவுளம் நிறைவேற்றுதலே என் வாழ்வின் நோக்கமும் ஏக்கமுமாக வேண்டும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஜூன் 2025, 13:00