தடம் தந்த தகைமை - வாய்க்குள் செல்வது
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின
வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளிவருவதே
மனிதரைத் தீட்டுப்படுத்தும், (மத் 15:11) என்றார் இயேசு.
அறிவார்ந்த செயல்கள் நாளடைவில் நம் சமூகத்தில் சடங்குகளாக்கப்பட்டது போலவே யூத சமூகத்திலும் நிலவியது. அவர்கள் எவற்றை உண்ண வேண்டும், எப்படி உண்ண வேண்டும், எவ்வுணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் சட்டங்கள் தீட்டி வைத்திருந்தனர். அவை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மலைப்பாக இருக்கும். எல்லாவற்றையும் சட்டத்திற்குள் இட்டு சமத்துவ வாழ்வைத் தொலைத்த அச்சமூகத்திற்கு இயேசுவின் மாற்றுப்பார்வை மருந்து போன்றுக் கசந்தது.
உணவு சுகாதாரக் குறைபாடுடனோ, கெட்டுப் போனதாகவோ இருந்தால் அது வயிற்றைப் பாதிக்கும். உள்ளத்தைப் பாதிக்காது. ஆனால் உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கும் தீய எண்ணங்கள், பார்வைகள், செயல்பாடுகள், வார்த்தைகள் யாவும் சொல்பவரையும், ஏனையோரையும் வெகுவாகப் பாதிக்கும். உள்ளத்தைத் தூயதாக்காமல், உள்ளதெல்லாம் செய்தாலும் ஒரு பயனுமில்லை. நல்ல மனிதரின் இதயமே இவ்வுலகில் கடவுளின் கோவில்.
இறைவா! என் உள்ளத்தைத் தூயதாய்க் காக்கவும், அதில் எழும் எண்ணத்தைத் தீபமாக்கவும், நற்செயலை நீர் விரும்பும் பலியாக்கவும் வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்