MAP

இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து  

தடம் தந்த தகைமை - என்னைப் பற்றி நானே சான்று பகர்ந்தால்

உண்மைக் கடவுளையும் உண்மை வாழ்வையும் உணர்த்துவதே இயேசுவின் தலையாயப் பணியாக இருந்தது. சட்டங்களுள் முட்டிமோதிக் கிடந்தவர்களுக்கு இயேசுவின் உண்மை சார்ந்த போதனைகள் கசந்தன.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

என்னைப் பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது. என்னைப்பற்றி சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப் பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும், (யோவா 5:31,32) என்றார் இயேசு.

இது சான்று தேடும் உலகம். சான்றுகளின் அடிப்படையிலேயே சத்தியங்கள் சாத்தியமாகின்றன. இயேசுவின் பார்வைகள், போதனைகள், அணுகுமுறைகள், வாழ்வுமுறை யாவும் ஏனைய போதகர்களைப் போலன்றி வித்தியாசமாக இருந்தன. மெசியா என்பவர் நடைமுறைச் சட்டங்களைக் கட்டிக் காப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் இயேசு மாற்றுச் சிந்தனைகளைக் கொண்ட மனித நேயராகச் செயல்பட்டதால் “மெசியா”-வுக்கான சான்றுகளை அவரிடம் சல்லடை போட்டுத் தேடினர் யூதர்கள்.

“உண்மையைப் பற்றிய எண்ணத்தை உறுதியுடன் அறிவிப்பதே சான்று”. உண்மைக் கடவுளையும் உண்மை வாழ்வையும் உணர்த்துவதே இயேசுவின் தலையாயப் பணியாக இருந்தது. சட்டங்களுள் முட்டிமோதிக் கிடந்தவர்களுக்கு இயேசுவின் உண்மை சார்ந்த போதனைகள் கசந்தன. நம்பிக்கை உள்ளவர்களுக்குச் சான்று தேவையிராது. நம்பிக்கை இழந்தவர்களுக்கு எந்தச் சான்றும் போதாது. நம் உண்மையான வாழ்வே உலகிற்கான உயர்ந்த சான்று. சான்றுகளைத் தேடிக்கொண்டிருந்தால் சந்தோஷம் ஓடிப் போய்விடும்.

இறைவா! பொருளையும் புகழையும்விட என் வாழ்வையே இப்பூமிக்குச் சான்றாக்கும் வாய்ப்பைத் தாரும்

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஜூன் 2025, 14:41