தடம் தந்த தகைமை - இக்காலத்தை ஆய்ந்து பாராமல்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து
பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?
(லூக் 12:56) எனக் கேட்டார் இயேசு.
எப்போதுமில்லா அளவுக்கு இந்நூற்றாண்டில் காணப்படும் எதிர்பாராப் பேரிடர்கள், கனமழை, வெள்ளம், புயல்கள், கட்டுக்கடங்காக் காட்டுத்தீ, சுனாமி, நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலைச் சீற்றங்கள், திடீர் மணல் மேடுகள் என்பவை யாவும் மனித குலத்திற்கு இயற்கை வழங்கும் எச்சரிக்கைகள். இவற்றின் காரணங்களையும், விளைவுகளையும் பகுத்தாயும் அறிவுத்திறனை மனிதகுலம் கொண்டிருந்தாலும் இயற்கை அழிப்பு இன்னும் தொடர்கதை அல்லவா? இயற்கைவளப் பேணலுக்காக, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, புவி வெப்பமாதலுக்கு எதிராகக் கூட்டங்களும் தீர்மானங்களும் தினம் தினம் பல நூறு. இன்றைய உலகில் பல இளவல்களின் இயற்கை காக்கும் இயக்க உணர்வுகளும் ஒளிக் கீற்றுகளாய் இங்கும் அங்குமாய். ஆனால் நாளுக்கு நாள் இயற்கை அன்னையின் நலநிலை நலியக் காரணம் நம் ஒவ்வொருவரின் சுயநல மனநிலைதான்! அருள் வாழ்விலும் அறநெறியிலும் ஏற்பட்டத் தோல்வியின் விளைவே சுற்றுச்சூழல் சீர்கேடு.
இறைவா! பொதுவீடாம் பூமியை என்னிலும் மேலாகப் பார்த்துப் பாதுகாக்கும் பரந்த பார்வை தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்