தடம் தந்த தகைமை - ஏதாவது பார்க்கிறீரா?
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
பெத்சாயிதாவில் பார்வையற்றவரிடம், ஏதாவது பார்க்கிறீரா? (மாற் 8:24) என்று கேட்டார் இயேசு. அதற்கு பார்வையற்றிருந்தவரோ, ‘மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப்போலத் தோன்றுகிறார்கள், ஆனால் நடக்கிறார்கள்’ என பதிலளித்தார்.
பெத்சாய்தா - என்ற இடப்பெயரின் பொருள் 'மீன் பிடிப்பவரின் வீடு'என்பதாகும். இதுவே பேதுரு, அந்திரேயா, பிலிப்புவின் சொந்த ஊர். இயேசு சொல்லில் வல்லவர் என்பதைவிடச் செயலில் சிறந்தவர் என்பதற்குப் பெத்சாய்தா நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு. இயேசுவின்
பார்வையளிப்பில் பார்வையற்றவரை 1. கைகோக்கின்றார். 2. ஊருக்குவெளியே அழைத்துச் செல்கின்றார். 3. விழிகளில் உமிழ்கின்றார். 4. அவர்மீது கை வைக்கின்றார். இறுதியாகத்தான் 5. பார்க்கிறீரா எனக் கேட்டு உரையாடுகின்றார்.
வேகமாக வீட்டுக்குள் நுழைந்த ஜாண் தனது அம்மாவிடம் ‘வழியிலே ஒரு விபத்து, ஆளுக்கு பலத்த அடி, பிழைப்பது அவ்வளவுதான்’ என்றான். “அடிபட்டுக் கிடந்த ஆளைப் பார்த்தாய்தானே! நீ என்ன செய்தாய்?” என அம்மா கேட்க, “இந்தா” என்று தான் எடுத்த செல்ஃபியைக் காட்டினான்.
இன்றைய சமூகத்தைப் பெரிதும் பாதித்துள்ள ஒரு பெரும் நோய் பாராமுகம். எல்லா அநியாயங்களையும் அகலத் திறந்து பார்த்துவிட்டு ஏதும் தெரியாதது போல் நடக்கும் சமூகம் உயிரற்றது. தீமைகளைப் பார்த்துப் பழகிவிட்டால் தீமைகூட நன்மையாகத் தோன்றும்.
இறைவா! உம்மைப்போல நேய உணர்வுகளைச் செயலாக்கி வாழ வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்