தடம் தந்த தகைமை – அம்மோனியர் மற்றும் சிரியரை வெற்றிகொண்ட தாவீது
மெரினா ராஜ் – வத்திக்கான்
யோவாபும் அவரோடிருந்த மக்களும் சிரியரோடு போரிட நெருங்கினார்கள். அவர்களோ அவருக்கு முன்பாகப் புறமுதுகிட்டு ஓடினர். சிரியர் புறமுதுகிட்டு ஓடுவதை அம்மோனியர் கண்டபோது, அவர்களும் யோவாபின் சகோதரன் அபிசாயிக்கு முன்பாகச் சிதறியோடி நகருக்குள் புகுந்தனர். யோவாபும் எருசலேமுக்குத் திரும்பி வந்தார். தாங்கள் இஸ்ரயேலருக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதைக் கண்ட சிரியர், தூதர்களை அனுப்பி நதிக்கு அப்பாலிருந்த சிரியரையும் வரவழைத்தனர். அதரேசரின் படைத்தலைவன் சோபாகு அவர்களை முன்னின்று நடத்தினான். அதைக் கேள்வியுற்ற தாவீது இஸ்ரயேலர் அனைவரையும் ஒன்றுதிரட்டி, யோர்தானைக் கடந்து சென்று, சிரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார்.
அவ்வாறு, தாவீது போருக்கு அணிவகுத்து நிற்கையில் சிரியப் படைகள் அவரோடு மோதின. சிரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகப் புறமுதுகிட்டு ஓடினர். தாவீது சிரியர் படையின் ஏழாயிரம் தேர்ப்படை வீரரையும், நாற்பதாயிரம் காலாள்படையினரையும், வெட்டி வீழ்த்தினார்; படைத் தலைவன் சோபாகையும் கொன்றார். அதரேசரின் அலுவலர், தாங்கள் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டதைக் கண்டு, தாவீதோடு சமாதானம் செய்து அவருக்கு அடிபணிந்தனர். அதன்பின் அம்மோனியருக்கு உதவி செய்ய சிரியர் என்றுமே விரும்பவில்லை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்