MAP

பங்களாதேஷ் மறைமாவட்ட அருள்பணியாளர்கள் பங்களாதேஷ் மறைமாவட்ட அருள்பணியாளர்கள்  

எதிர்நோக்கு என்பது ஒரு மகத்தான ஆற்றல்

திருப்பயணம் என்பது வெறும் இடங்களுக்குச் செல்வது மட்டுமல்ல, இயேசுவின் பாதையில் அன்னை மரியாவை நம் இதயங்களில் சுமந்து பயணிப்பது. - அருள்தந்தை Mintu Lawrence Palma.

மெரினா ராஜ் – வத்திக்கான்

எதிர்நோக்கு என்பது ஒரு மகத்தான ஆற்றல் என்றும், திருப்பயணம் என்பது வெறும் இடங்களுக்குச் செல்வது மட்டுமல்ல, இயேசுவின் பாதையில் அன்னை மரியாவை நம் இதயங்களில் சுமந்து பயணிப்பது என்றும் எடுத்துரைத்தார் அருள்தந்தை Mintu Lawrence Palma.

கடந்த ஜூன் 24 செவ்வாய்க்கிழமை முதல் 27 வெள்ளிக்கிழமை வரை பனாமி தூய ஆவியார் குருத்துவ இல்லத்தில் நடைபெற்ற பங்களாதேஷ் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கான ஆண்டுக்கூட்டத்தின் உரையாற்றிய போது இவ்வாறு எடுத்துரைத்தார் அம்மறைமாவட்ட அருள்பணியாளர்களின் தலைவரான அருள்தந்தை Mintu Lawrence Palma.

எதிர்நோக்கு என்பது ஒரு மகத்தான ஆற்றல் என்றும் பங்களாதேஷ் மறைமாவட்ட அருள்பணியாளர்கள் அன்னை மரியாவுடன் இணைந்து திருப்பயணம் மேற்கொள்ள கூடியிருக்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார் அருள்பணியாளர் Mintu Lawrence Palma.

திருப்பயணம் என்பது வெறும் இடங்களுக்குச் செல்வது மட்டுமல்ல, இயேசுவின் பாதையில் அன்னை மரியாவை நம் இதயங்களில் சுமந்து பயணிப்பது என்று எடுத்துரைத்த அருள்தந்தை Palma அவர்கள், எதிர்நோக்கின்றி மனிதர்கள் வாழ முடியாது என்றும் வலியுறுத்தினார்.

நிகழ்வின் தொடக்கமாக நடைபெற்ற திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றிய தாக்கா உயர்மறைமாவட்ட துணை ஆயர்  Subroto Boniface Gomes அவர்கள், எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டில் நாம் நடத்தும் இக்கூட்டத்தில் அன்னை மரியா நம்முடன் இருக்கின்றார் என்றும், அவரே அருள்பணியாளர்களின் அன்னை, எனவே அவருடன் இணைந்து நமது திருப்பயணத்தை நாம் பலனுள்ளதாக்குவோம் என்றும் கூறினார்  

நிகழ்வின் இறுதி நற்கருணை வழிபாட்டுக் கொண்டாட்டத்தின்போது மறையுரையாற்றிய டாக்காவின் பேராயர் பெஜாய் என். டி'குரூஸ் அவர்கள், இயேசு பிறந்த 2025ஆம் ஆண்டினை எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டாக சிறப்பிக்கும் நாம், இந்த எதிர்நோக்கைக் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும் என்றும், எதிர்நோக்கிலிருந்து நம்பிக்கை பிறக்கின்றது எனவே நாம் அனைவரும் எதிர்நோக்கின் மக்களாகக் கட்டாயம் மாற வேண்டும் என்றும் கூறினார்.

"இயேசு நம் சுமைகளை நீக்குவார் என்ற நம்பிக்கையுடன் நாம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய பேராயர் அவர்கள், நாம் நமது துன்பங்களை ஏற்றுக்கொள்ளும்போது ​​அது கடவுளுக்கான புகழ்ச்சியாக மாறும் என்றும், வலியுறுத்தினார்.

குருத்துவ இல்லத்தின் அதிபர் தந்தை அருள்பணி பால் கோம்ஸ் அவர்கள் அனைத்து அருள்பணியாளர்களையும் வரவேற்று கூறுகையில், இக்குருத்துவ இல்லமானது அனைவருக்கும் பொதுவான இல்லம் என்றும், இங்கு தான் நாம் அனைவரும் கல்வி, ஆன்மிகம், பாதுகாப்பு, அன்பு போன்றவற்றைப் பெற்று அருள்பணியாளர்களாக மாறினோம் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஜூன் 2025, 14:18