கத்தோலிக்க ஊடகங்களின் பங்களிப்பு பயனுள்ளது
மெரினா ராஜ் – வத்திக்கான்
கத்தோலிக்கத் திருஅவை, ஊடகங்களில் இருப்பது நவீன உலகிற்கு மிகவும் முக்கியமானது என்றும், பல்வேறு தலத்திருஅவைகளின் செயல்பாடுகள், இளைஞர்களின் பணிகள் போன்றவற்றை ஆவணமாகத் தயாரித்து மக்களுக்கு சமூக வலைதளங்களின் வழியாக வெளிப்படுத்தி வரும் பணி பயனுள்ளதாக இருக்கின்றது என்றும் கூறினார் அருள்பணி Oleksandr Zelinsky.
மே 22, வியாழனன்று உக்ரைனில் நிலவும் போர், கத்தோலிக்க ஊடகங்களின் பங்களிப்பு, யூபிலி ஆண்டு திருப்பயணம் ஆகியவை குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலின்போது இவ்வாறு கூறினார் Eternal Word Television) Ewtn எனப்படும் தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குநர் அருள்பணி Oleksandr Zelinsky.
பரபரப்பான தன்மை மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கத்தோலிக்க செய்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும், மக்களுக்கு ஆர்வத்தையும் தெளிவையும் ஏற்படுத்தும் வகையில் மிகைப்படுத்தாமல் செய்திகளைக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார் அருள்பணியாளர் அலெக்சாண்டர்.
உக்ரைனின் கீவில் செயல்பட்டு வரும் கத்தோலிக்க ஊடகங்கள் போரின் இருளில் ஒரு வெளிச்சத்தை மக்கள் மத்தியில் கொண்டு வருகின்றன என்றும், விலைமதிப்பற்ற மதிப்புகளைத் தாங்குபவர்களாக இருப்பதற்காக நவீனமாகவும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்டு வருகின்றோம் என்றும் கூறினார் அருள்பணியாளர் அலெக்சாண்டர்.
உக்ரேனிய மக்கள், தங்கள் அன்றாட வாழ்க்கையின் துயரமான தன்மையைக் கொண்டிருந்தாலும், உக்ரைனில் உள்ள உரோமன் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் கத்தோலிக்க ஊடக மையத்தின் பணி வாயிலாக திருஅவை செய்திகளை அறிந்து வருகின்றார்கள் என்றும் தெரிவித்தார் அருள்பணியாளர் அலெக்சாண்டர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்