MAP

பிலிப்பீன்சின் அழிந்த மிகப்பெரும் கடல் சிப்பிகள் பிலிப்பீன்சின் அழிந்த மிகப்பெரும் கடல் சிப்பிகள்  (AFP or licensors)

பிலிப்பீன்ஸ் தீவுகளின் வளம் அழிய பிரிட்டன் வங்கிகள் உதவி

இயற்கை வாயுவைத் தேடும் நோக்கத்தில் ஆலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்வதால் அபூர்வ உயிரினங்களும், பசுமை வளமும் அழிந்துபோவதற்கு பிரிட்டன் வங்கிகள் உதவுவதாகக் குற்றச்சாட்டு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பிலிப்பீன்ஸ் நாட்டின் கடல் பகுதியில் லுசோன் மற்றும் மிந்தோரோ தீவுகளுக்கு இடையே இருக்கும் Verde Island Passage  எனப்படும் பசுமை தீவு பாதையையும், பெருங்கடல் தீவுகளின் அபூர்வ உயிரினங்களையும் அழிப்பதில் உதவுவதாக பிரிட்டன் வங்கிகளை குற்றஞ்சாட்டியுள்ளன பிலிப்பின்ஸ் கத்தோலிக்க அமைப்புகள்.   

பெருங்கடலின் அமேசான் என அழைக்கப்படும் பிலிப்பீன்ஸ் தீவுகள் பகுதியில் இயற்கை வாயுவைத் தேடும் நோக்கத்தில் ஆலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்வதால் அபூர்வ உயிரினங்களும், பசுமை வளமும் அழிந்துபோவதற்கு  பிரிட்டன் வங்கிகள் உதவுகின்றன என குற்றஞ்சாட்டியுள்ளன பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க அமைப்புக்கள்.

பிலிப்பீன்ஸ் ஆயர் Gerry Alminaza என்பவரால் நடத்தப்படும் வெர்தே தீவு பாதுகாப்பு கூட்டமைப்பு என்பதுடன் இணைந்து Operation Noah என்ற அமைப்பும், வேறு பல கத்தோலிக்க அமைப்புக்களும் இக்குற்றச்சாட்டை பிரிட்டானிய வங்கிகளின் மீது வைத்துள்ளன.

ஏற்கனவே வெர்தே தீவு பாதையில் 5 எரிவாயு ஆலைகளைக் கொண்டுள்ள நிறுவனங்கள், மேலும் எட்டு புதிய ஆலைகளை அமைக்க பிரிட்டானிய வங்கிகள் நிதியுதவிகளை வழங்கி வருவது இயற்கை வளங்களின் அழிவுக்கே இட்டுச் செல்லும் என்ற கவலையை வெளியிட்டுள்ளன இந்த அமைப்புக்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 மே 2025, 16:27