தடம் தந்த தகைமை – உடன்படிக்கைப்பேழையை சுமந்து வந்த லேவியர்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
தாவீது, குருக்களாகிய சாதோக்கு அபியத்தார் ஆகியோரையும் லேவியராகிய உரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாபு ஆகியோரையும் வரவழைத்தார். தாவீது அவர்களை நோக்கி, “நீங்கள் லேவியரின் மூதாதையர் வீட்டுத் தலைவர்கள்; ஆண்டவராகிய கடவுளின் பேழைக்கென நான் ஏற்பாடு செய்துள்ள இடத்திற்கு அதைக் கொண்டுவரும்படி நீங்களும் உங்கள் உறவின்முறையினரும் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். முன்பு ஒருமுறை நீங்கள் சுமக்காததால் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குள் அழிவு உண்டாகச் செய்தார். ஏனெனில், நாம் அவர் கட்டளைப்படி செயற்படாமற் போனோம்” என்றார்.
எனவே, குருக்களும் லேவியரும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பேழையைக் கொண்டு வரத் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டார்கள். பின்பு, லேவியர், மோசேயின் கட்டளையாகத் தந்த ஆண்டவரது வாக்கின்படி, கடவுளின் பேழையை அதன் தண்டுகளால் தங்கள் தோள்மேல் சுமந்து வந்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்