MAP

அருள்சகோதரிகள் Georgina மற்றும் Flora அருள்சகோதரிகள் Georgina மற்றும் Flora 

புலம்பெயர்ந்த மக்களுக்கு செவிசாய்ப்பதே முதன்மையான பணி

அல் கஷாஃபா, ஜெமேயா மற்றும் ஜோரி போன்ற முகாம்களில் வாழ்பவர்களுக்கு மறைக்கல்வி அளித்தல், நோயாளர்களைச் சந்தித்தல், வன்முறை மற்றும் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளித்து வருதல் போன்ற பணிகளைச் செய்து வருகின்றனர் சகோதரிகள்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தென்சூடானிலிருந்து புலம்பெயர்ந்து வரும் மக்கள் தங்களது நம்பிக்கையை ஆழப்படுத்தவும், பொறுமையுடன் தங்கள் துயரங்களை ஏற்கவும், திருஇருதய சபை சகோதரிகள் வழிநடத்தும் புலம்பெயர்ந்தோர் முகாம் செயல்பட்டு வருகின்றது என்றும், அத்தகைய மக்களுக்கு செவிசாய்ப்பதே தங்களது முதன்மையான பணி என்றும் கூறியுள்ளார் அருள்சகோதரி Georgina Victor Nyarat

இலட்சக்கணக்கான தென்சூடான் மக்கள் மோதல் மற்றும் வன்முறையிலிருந்து தப்பி தாங்கள் நடத்தும் புலம்பெயர்ந்தோர் முகாமில் வாழ்கின்றனர் என்றும், அங்கு வரும் மக்களுக்கு ஆன்மிக பராமரிப்பு, ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை வழங்கிவருவதாகவும் எடுத்துரைத்துள்ளார் 2023 ஆம் ஆண்டு முதல் Al Kashafa முகாவில் பணியாற்றி வரும் அருள்சகோதரி Georgina Victor Nyarat

அல் கஷாஃபா, ஜெமேயா மற்றும் ஜோரி போன்ற முகாம்களில் வாழ்பவர்களுக்கு மறைக்கல்வி அளித்தல், நோயாளர்களைச் சந்தித்தல், வன்முறை மற்றும் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளித்து வருதல் போன்ற பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ள சகோதரி அவர்கள், ஓர் எளிமையான குடியிருப்பாக இருந்தாலும் அவர்களது முகாம் இடம்பெயர்ந்தவர்களுக்கு ஓர் உயிர்நாடியாக இருந்து வருகிறது என்றும் பகிர்ந்துள்ளார்.

தொடக்கத்தில், திருவையுடன் நெருக்கமாக இல்லாத மக்கள் தற்போது தங்களுடன் இணைந்து செபிக்க விரும்புகிறார்கள் என்றும், தங்களிடம்  இருக்கும் குறைவான பொருள்களையும் பிற புலம்பெயர்ந்தோருக்குக் கொடுத்து உதவி வருகின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார்  அருள்சகோதரி Georgina Victor Nyarat

தென்சூடானில் ஆயர் Sixtus Mazzoldi அவர்களால் 1954- ஆம் ஆண்டு நிறுவப்பட்ட திருஇருதய சபையானது, போர் மற்றும் புலம்பெயர்தலை சந்தித்துள்ளது, 1964- ஆம் ஆண்டு ஏற்பட்ட முதல் சூடான் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிய சகோதரிகள் தென்சூடானுக்கு மீண்டும் திரும்புவதற்கு முன்பு உகாண்டாவில் தஞ்சம் புகுந்தனர், ஆனால் 1983- ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக சூடான் உள்நாட்டுப் போர் வெடித்தபோது மீண்டும் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதிருந்து, அவர்கள் தங்கள் மக்களுடன் தங்கி பணியைத் தொடர்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 மே 2025, 16:22