MAP

அருள்சகோதரி கபிரியேலா அருள்சகோதரி கபிரியேலா 

நம்பிக்கை தரும் இடமாகத் திகழும் மழலையர் பள்ளி

நாசரேத் திருக்குடும்ப சபையைச் சார்ந்த அருள்சகோதரி கபிரியேலா மற்றும் பிரான்செஸ்கா தங்களது சபையைச் சார்ந்த அருள்சகோதரிகளுடன் இணைந்து உக்ரைனின் சைட்டோமிரில் (Žytomyr) மழலையர் பள்ளி மற்றும் அனாதைகள், கைம்பெண்களுக்கான குடும்ப ஆதரவு மையத்தை நடத்தி வருகின்றனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மிகவும் இக்கட்டான பணியில் இருக்கும் தொழிலாளர்கள், மற்றும் தன்னார்வலர்களின் குழந்தைகளுக்கான மழலையர் பள்ளியானது, பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இடமாக இருக்கின்றது என்றும், போர்க்காலத்தில் தங்குமிடமாக, செபிக்கும் இடமாக, நம்பிக்கை தரும் இடமாக இருக்கின்றது என்றும் கூறினார் அருள்சகோதரி கபிரியேலா

நாசரேத் திருக்குடும்ப சபையைச் சார்ந்த அருள்சகோதரி கபிரியேலா மற்றும் பிரான்செஸ்கா தங்களது  சபையைச் சார்ந்த அருள்சகோதரிகளுடன் இணைந்து உக்ரைனின் சைட்டோமிரில் மழலையர் பள்ளி மற்றும் அனாதைகள் கைம்பெண்களுக்கான குடும்ப ஆதரவு மையத்தை நடத்தி வருகின்றனர்.

2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று முதல் தொடங்கிய போரினால் எல்லாம் மாறி, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், அவரும் அவரது உடன் சகோதரிகளும் காரித்தாஸ் அமைப்புடன் இணைந்து மனிதாபிமான பொருள்களை சேகரித்த அனுபவங்களையும் வத்திக்கான் செய்திகளிடத்தில் நினைவுகூர்ந்தார் அருள்சகோதரி பிரான்சிஸ்கா துமனிவிச்.

2022-ஆம் ஆண்டு மே மாதம் காரித்தாஸ் வளாகத்தில் தொழிலாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் குழந்தைகளுக்காக ஒரு நாள் முழுவதும் இயங்கும் மழலையர் பள்ளியைத் திறந்ததாக எடுத்துரைத்த அருள்சகோதரி பிரான்சிஸ்கா அவர்கள், பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள், குழந்தைகளை எங்கு விட்டுச் செல்வது என்று அறியாமல் கலங்கியபோது தாங்கள் அக்குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

நான்கு மற்றும் ஐந்து வயதுடைய ஏறக்குறைய 20 குழந்தைகள் ஒவ்வொரு நாளும் மழலையர் பள்ளிக்கு வருகின்றார்கள் என்றும், கலை மற்றும் ஆங்கில வகுப்புகள் மட்டுமன்று செபத்தில் பங்கேற்று போரில் ஈடுபடுபவர்களுக்காகவும் நாட்டின் அமைதிக்காகவும் செபிக்கின்றனர் என்றும் கூறினார் அருள்சகோதரி பிரான்சிஸ்கா.

குடும்ப ஆதரவு நிறுவனம் வழியாக அனாதைகள், கைம்பெண்கள் ஆகியோர்க்கு மனநல ஆலோசனைகள், கலந்துரையாடல்கள், நம்பிக்கைப் பகிர்வுகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன என்றும், மொழி, நடனம், பாடல், விளையாட்டு போன்றவற்ரில் பயிற்சியும் வழங்கபப்ட்டு வருகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி.

இங்கு வரும் பெண்களின் கதைகள் மிகவும் கடினமானவை, மனதைத் தொடும் தன்மை கொண்டவை, அதனால் இந்த நிறுவனத்தின் செயல்பாடு மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்திய அருள்சகோதரி அவர்கள், குடும்ப பராமரிப்பு மையத்தை நடத்துவது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒருங்கிணைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 மே 2025, 14:39