MAP

கர்தினால் பிட்சபாலா கர்தினால் பிட்சபாலா 

இன்றைய உலகம் தேடும் அமைதி, கிறிஸ்துவிலிருந்து வரும் அமைதி

கர்தினால் பிட்சபாலா : இன்றைய உலகில் அடிக்கடி பேசப்படும் பொருளாக அமைதி இருந்தாலும், சகோதரத்துவ அன்பு என்பது ஒரு புலனாகாதப் பொருளாகவும், உண்மை நிலைகளிலிருந்து அகற்றப்பட்ட ஒன்றாகவும் தெரிகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

காசாவில் துன்புறும் அனைத்து மக்களுக்கும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் ஆற்றவேண்டும் என உலக கிறிஸ்தவ சமூகத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார் கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா.

காசா பகுதியின் அமைதிக்கான திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் குரலோடு தன் குரலையும் இணைக்கும் யெருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பிட்சபாலா அவர்கள், உலகில் போர் இடம்பெறும் பகுதிகளில் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என தன் பதவியேற்பு நாளின் போதும் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்ததை மீண்டும் நினைவூட்டினார்.

இன்றைய உலகம் தேடும் அமைதி, அரசியல் அமைதியோ அல்லது போர் இன்மையால் கிடைக்கும் அமைதியோ அல்ல, மாறாக, பகைமை, பிரிவினைகள் மற்றும் மோதல்களால் துன்புற்றிருக்கும் உலகிற்கு இயேசுவிடமிருந்து வரும் அமைதியே தேடப்படுகிறது என்றார் கர்தினால்.

ஒருவர் கடவுள் மீதும் தனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கொண்டிருந்தால் அமைதி என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது என்ற கர்தினால் பிட்சபாலா அவர்கள், இன்றைய உலகில் அடிக்கடி பேசப்படும் பொருளாக அமைதி என்பது இருந்தாலும், சகோதரத்துவ அன்பு என்பது ஒரு புலனாகாதப் பொருளாகவும், உண்மை நிலைகளிலிருந்து அகற்றப்பட்ட ஒன்றாகவும் தெரிவதாக மேலும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 மே 2025, 15:16