நைஜீரியாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்!
ஜெர்சிலின் டிக்ரோஸ் -வத்திக்கான்
நைஜீரியாவின் மத்திய குடியிருப்புகள் மீது புலானி என்னும் மதவாத இயக்கத்தினரால் மே 24 முதல் மே 26 வரை நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 9 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், மேலும் இருவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் ICN எனப்படும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2018-ஆம் ஆண்டு நைஜீரியாவின் Gwer மேற்குப் பகுதியில் உள்ள Tse Orbiam- இல் இடம்பெற்ற முதல் தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு அருள்பணியாளர்களின் நினைவஞ்சலியில் பங்குபெற்று திரும்பிய அருள்பணியாளர் சாலமன் அடோங்கோ என்பவர் ஆயுதமேந்திய புலானி மதவாத இயக்கத்தினரால் காலில் சுடப்பட்டார் என்றும், மேலும் இருவர் அவ்வியக்கத்தினரால் கடத்தப்பட்டுள்ளனர் என்றும், மகுர்டி மறைமாவட்டத்தின் நீதி மற்றும் அமைதிக்கான அமைப்பைச் சார்ந்த ஓரி ஹோப் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.
ஆயுதம் ஏந்திய புலானி மதவாத இயக்கத்தினரால் நடத்தப்பட்ட இந்தக் கண்மூடித்தனமானத் தாக்குதலால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும், இதன் விளைவாக அச்சம் மற்றும் குழப்பத்தால் அவர்களில் பலர் பாதுகாப்புத் தேடி தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர் என்றும் அச்செய்தி நிறுவனத்திடம் மேலும் தெரிவித்துள்ளார் இம்மானுவேல்.
அதேவேளையில், ஜிம்பாவில் நடைபெற்ற தாக்குதலுக்குப் பாதுகாப்பு சேவைகள் பதிலளிக்கத் தவறியதை விமர்சித்துள்ளார் மகுர்டி மறைமாவட்டத்தின் உலகளாவிய ஆலோசனைக் குழுவின் தலைவர் அருள்பணியாளர் ஆலிவர் ஓர்டெஸ்.
மேலும் முகாம்களுக்கு சென்றுள்ள தப்பிப்பிழைத்தவர்கள், பிழைப்புத் தேடுவதற்காக யாசகர்களாக மாறுவதால் தாக்குதல்காரர்கள் மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்குகிறார்கள் என்றும் கூறியுள்ளார் அருள்பணியாளர் ஓர்டெஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்