MAP

 Sheshan அன்னை மரியா திருத்தலம் Sheshan அன்னை மரியா திருத்தலம்  

நமது நம்பிக்கை என்னும் ஒளி வளர்ச்சியடைய வேண்டும்

கிறிஸ்துவின் போதனைகளால் வழிநடத்தப்படவும், அருள்மிகப்பெற்ற கன்னி மரியாவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி, பிறரன்புப் பணிகள் செய்து, நம்பிக்கையின் பாதையில் அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டும். - ஆயர் Shen Bin

மெரினா ராஜ் – வத்திக்கான்

நம்மைச் சுற்றி இருளில் வாழும் மற்றவர்களை ஒளிரச் செய்வதன் வாயிலாக நமது நம்பிக்கையானது ஒளி வீசி வளர்ச்சியடைய வேண்டும் என்று வலியுறுத்தி உலக அமைதிக்காகவும் புதிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களுக்காகவும் செபித்து திருப்பலி நிறைவேற்றினார் Shanghai மறைமாவட்ட ஆயர் Joseph Shen Bin

அண்மையில் சீனாவின் ஷாங்காய் மறைமாவட்டத்தில் உள்ள ஷெஷன் மலையில் உள்ள கிறிஸ்தவர்களின் சகாய அன்னை மரியாவின் திருத்தலம் நோக்கி மே மாதத்தில் திருப்பயணம் மேற்கொள்ளும் திருப்பயணிகளுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார் Shanghai மறைமாவட்ட ஆயர் Joseph Shen Bin

கன்னி மரியாவின் பரிந்துரையானது உலகில் அமைதிக்கான கொடையாகக் கிடைக்கப்பெற செபிப்போம் என்றும், அன்னையின் உறுதியான நம்பிக்கையைப் பின்பற்றவும், கடவுளை நோக்கித் திரும்பிய அவரின் நிலையான உறுதியான பார்வையைப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார் ஆயர் Shen Bin.

மேல் நோக்கிப் பார்ப்பது என்பது இறைவனின் வழிகாட்டுதலை தாழ்மையுடன் தேடுவதற்கான அடையாளம் என்று எடுத்துரைத்த ஆயர் Shen Bin அவர்கள், இறைவனின் வழிகாட்டுதலில் அவரது ஒளியும் அமைதியும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

நம்மைச் சுற்றியுள்ள இருளில் மற்றவர்களை ஒளிரச் செய்ய நமது நம்பிக்கையும் பிரகாசமாக வளர வேண்டும்" என்று கேட்டுக் கொண்ட ஆயர் அவர்கள், இந்த திருப்பயணத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் திருஅவையின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்காகவும், மறைமாவட்டத்தில் உள்ள அருள்பணியாளர்கள் மற்றும் மக்களுக்கு அமைதி மற்றும் தூய்மையான வாழ்விற்காகவும் செபிக்க வலியுறுத்தினார்.

கிறிஸ்துவின் போதனைகளால் வழிநடத்தப்படவும், அருள்மிகப்பெற்ற கன்னி மரியாவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி, பிறரன்புப் பணிகள் செய்து, நம்பிக்கையின் பாதையில் அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார் ஆயர் Shen Bin

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 மே 2025, 12:30