திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணைமடல் பகுதி 26
மெரினா ராஜ் – வத்திக்கான்
யூபிலி ஆண்டில் நாம் பயணிக்கும்போது, திருத்தூதர் பவுல் எபிரேயருக்கு எழுதிய திருமடலில் உள்ள வார்த்தைகளை நாம் நினைவில் கொள்ளவேண்டும். “அடைக்கலம் தேடும் நாம், நம் கண்முன் எதிர்நோக்கியுள்ளதை விடாமல் பற்றிக்கொள்வதற்குத் தளரா ஊக்கம் கொண்டிருக்கவேண்டும். இந்த எதிர்நோக்கே நம் உள்ளத்திற்குப் பாதுகாப்பான, உறுதியான, நங்கூரம் போன்றுள்ளது. இது கோவிலின் திரைச்சீலைக்கு அப்பால் சென்று சேர்ந்திருக்கிறது. நமக்கு முன்னோடியாய் அந்தத் திரைச்சீலையைக் கடந்து இயேசு அங்குச் சென்று சேர்ந்திருக்கிறார். மெல்கிசதேக்கு முறைப்படி என்றென்றும் தலைமைக் குரு என்னும் நிலையில் நம் சார்பாக அவர் அங்குச் சென்றிருக்கிறார்”. எபி. 6:18-20). நமக்குக் கொடுக்கப்பட்ட இத்தகைய நம்பிக்கையை ஒருபோதும் இழக்காமல், கடவுளில் அடைக்கலம் தேடுவதன் வழியாக நாம் அதைப் பற்றிக்கொள்வதற்கான ஒரு வலுவான அழைப்பாக இதை நாம் கருதவேண்டும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்