MAP

யூபிலி ஆண்டு 2025 யூபிலி ஆண்டு 2025  

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணை மடல் பகுதி - 27

கடவுளின் அருள் என்னும் எதிர்நோக்கில் நிலைத்து நிற்கின்றோம். அதிலே நிலைத்து நிற்க நங்கூரமிடப்பட்டுள்ளோம்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

2025-ஆம் ஆண்டு யூபிலி கருப்பொருளை அடையாளப்படுத்தும் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள நங்கூரத்தின் உருவமானது கடவுள் மேல் நாம் வைத்திருக்க வேண்டிய ஆழமான நம்பிக்கையை அடையாளப்படுத்துகின்றது. கொந்தளிக்கும் நீர் போன்ற வாழ்வின் மத்தியில் கடவுளாகிய இயேசுவிடம் நாம் நம்மை ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கும்போது நிலைத்தத் தன்மை மற்றும் பாதுகாப்பை நாம் புரிந்துகொள்ளலாம். இதற்கு ஒரு சான்றாக திகழ்கின்றது சிலுவை வடிவில் சித்தரிக்கப்பட்டிருக்கும் நங்கூரம்.

வாழ்வின் புயல்கள் ஒருபோதும் வெற்றிபெறாது, ஏனென்றால் நாம் கடவுளின் அருள் என்னும் எதிர்நோக்கில் நிலைத்து நிற்கின்றோம். நங்கூரமிடப்பட்டுள்ளோம். பாவம், அச்சம் மற்றும் இறப்பை வென்ற கிறிஸ்துவில் வாழும் திறன் கொண்டவர்களாக இருக்கின்றோம். உயிர்த்த இயேசுவில் நாம்  கொண்டிருக்கும் இத்தகைய எதிர்நோக்கானது வாழ்வின் ஒவ்வொரு நாளின் நிறைவு, வாழ்க்கை நிலைமைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் ஆகியவற்றை விட மிகப் பெரியது. இது  வாழ்வின் சோதனைகளுக்கு அப்பால் நம்மை அழைத்துச் செல்கிறது, மேலும் நாம் விண்ணகம் என்று அழைக்கும் இலக்கின் மாண்பை இழக்காமல் நடக்க நம்மைத் தூண்டுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 மே 2025, 10:46