MAP

இறைவா உமக்கே புகழ் இறைவா உமக்கே புகழ் 

நேர்காணல் - இறைவா உமக்கே புகழ் சுற்றுமடலின் பத்தாமாண்டு அனுபவம்

2015 -ஆம் ஆண்டு மே மாதம் வெளியான 'இறைவா உமக்கே புகழ்' திருமடலின் வழியாக மாறி வரும் காலநிலைச்சூழல்களால் மனித குலத்திற்கு தொடர்ந்து சவால்கள் விடுத்துவரும் சுற்றுச்சூழல் ஆபத்துக்களைக் குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நேர்காணல் - அருள்பணி கசி இராயப்பா

மெரினா ராஜ் – வத்திக்கான்

இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலானது நாம் வாழ்கின்ற இந்தப் பூமியின் எதிர்காலத்தை நாம் எவ்வாறு உருவாக்குகிறோம் என்பது குறித்த உரையாடலைப் புதுப்பிக்க நம்மை அழைக்கிறது. நிலையான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பின்தொடர்வதில் நாம் ஒன்றுபட்டு, கடவுளால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொதுவான வீட்டைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டு, எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குகிறோம் என்பது குறித்த உரையாடலைப் புதுப்பிக்க அழைக்கிறது.

2015 -ஆம் ஆண்டு மே மாதம் வெளியான 'இறைவா உமக்கே புகழ்' திருமடலின் வழியாக மாறி வரும் காலநிலைச்சூழல்களால் மனித குலத்திற்கு தொடர்ந்து சவால்கள் விடுத்துவரும் சுற்றுச்சூழல் ஆபத்துக்களைக் குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இறைவா உமக்கே புகழ் என்ற சுற்றுமடல் வெளியிடப்பட்ட பத்தாம் ஆண்டினை நாம் நினைவுகூர்கின்ற நிலையில் இன்றைய நமது நேர்காணலில் அச்சுற்றுமடல் குறித்த தனது கருத்துக்களை நம்முடன் பகிர்ந்துகொள்ள இருப்பவர் அருள்பணி கசி இராயப்பா. வேலூர் மறைமாவட்டத்தைச் சார்ந்தவரும், இயற்கை நல ஆர்வலருமான அருள்பணி கசி இராயப்பா அவர்கள் 15க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இயற்கை மேல் தான் கொண்டுள்ள ஆர்வத்தைப் பிறருக்கும் எடுத்துரைத்துக் கொண்டிருப்பவர். தந்தை அவர்களை இறைவா உமக்கே புகழ் என்ற சுற்றுமடல் குறித்தக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 மே 2025, 09:33