நேர்காணல் - தமிழக இளைஞர் பணிக்குழுவின் யூபிலி அனுபவம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
எதிர்நோக்கு என்பது இறைவனிடமிருந்து வரக்கூடிய ஓர் ஆற்றல் நாம் கேட்கவேண்டிய ஆற்றல் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களுக்கிணங்க எதிர்நோக்கின் திருப்பயணிகளாக இந்த யூபிலி ஆண்டில் வாழவும், இறைவனின் அருளை நிரம்பப் பெற்றுக்கொள்ளவும் நாம் அழைக்கப்படுகின்றோம்.
திருஅவை, இளமையோடு செயல்படவேண்டியதன் அவசியம், இளையோரின் குரலுக்கு செவிமடுக்கவேண்டிய அவசியம், இளையோரை மையப்படுத்திய பணிகளை புதுப்பித்தல், இளையோரை ஈர்த்தல், திருஅவையில் தங்கள் முக்கிய இடத்தை உணர்ந்து இளையோர் செயலாற்றவேண்டும் என்பன போன்ற கருத்துக்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோர் பற்றிய தனது திருத்தூது அறிவுரை மடலில் பதிவு செய்துள்ளார். இளமைத்துடிப்புடன் நமது தமிழக ஆயர் பேரவையின் கீழ் இயங்கி வரும் தமிழக இளைஞர் பணிக்குழுவின் யூபிலி செயல்பாடுகள் குறித்து இன்றைய நமது நேர்காணலில் காணலாம்.
தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இதழ் குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இளைஞர் பணிக்குழுவின் மாத இதழான 'துடிப்பு' இதழின் இணை ஆசிரியரான சிவகங்கை மறைமாவட்டத்தைச் சார்ந்த அபிசேக் ராஜா அவர்கள், இளைஞர்களுக்கான யூபிலி திருஅவையில் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன என்பது பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கின்றார்.
தமிழ்நாடு இளம் கத்தோலிக்க மாணாக்கர் / இளம் மாணாக்கர் (YCS/YSM) இயக்கத்தின் துணைத்தலைவரான வேலூர் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்பரசி அவர்கள், திருஅவை வளர்ச்சியில் பதின்பருவத்தினர் ஆற்றக்கூடிய செயல்பாடுகள் பற்றி விளக்கமளிக்கின்றார்.
தமிழ்நாடு ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழு செயலர் அருள்பணி. ஜெனிபர் எடிசன் அவர்கள், இளையோருக்குக் கொடுக்கக்கூடிய செய்தி பற்றி எடுத்துரைக்கின்றார். இம்மூவரையும் எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்