MAP

பேராசிரியை திருமதி. விமலா ஆல்பர்ட் பேராசிரியை திருமதி. விமலா ஆல்பர்ட் 

நேர்காணல் - இசை வழியாக இறைப்பணியாற்றுவோம்

"இசைவழி இறைப்பணி" என்னும் அளப்பரிய பணியை, கத்தோலிக்க திரு அவைக்கு, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இருந்தே ஆற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு முத்தமிழ் வித்தகர் புலவர் பெருமான் திருமிகு. அய்யாத்துரை பாகவதர் அவர்களின் வழி வந்த நான்காவது தலைமுறையைச் சார்ந்தவர் சென்னையில் வசிக்கும் திருமதி. விமலா ஆல்பர்ட்.
நேர்காணல் - திருமதி. விமலா ஆல்பர்ட்

மெரினா ராஜ் - வத்திக்கான்  

இதயத்திற்கு இதமாக உள்ள இசை, உரையாடலை நமக்குள் திறக்கின்றது, சந்திப்பு மற்றும், நட்புறவைப் பேணி வளர்க்கின்றது, அமைதிக்கு வழியமைக்க நமக்கு அழைப்புவிடுக்கிறது என்று இசை குறித்து பல நேரங்களில் எடுத்துரைத்துள்ளார் நம் முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ். இசை நம் வாழ்வோடு இரண்டறக் கலந்தது. பிறப்பு முதல் இறப்பு வரை இசை நம் வாழ்வோடு இணைந்து வருகின்றது. திருவழிபாடு மற்றும் நற்செய்தியின் பறைசாற்றுதல் ஆகிய முக்கிய செயல்பாடுகளில், இசையின் பங்கு அளப்பரியது. "ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகின் எல்லையெங்கும் அவர் புகழ்ப் பாடுங்கள்" (எசாயா 42:10) என்று எசாயா இறைவாக்கினர் வழங்கும் அறிவுரைக்கு ஏற்ப, விவிலியம் முழுவதும் இசைக்கு தனியொரு இடம் வழங்கப்பட்டுள்ளது. "இசை இருக்குமிடத்தில், தீமையே எதுவும் இருக்க இயலாது" என்று  Miguel Cervantes  தனது Don Quixote என்னும் நூலில் எடுத்துரைக்கின்றார். இசையின் ஒரு முக்கிய அங்கமாக மௌனம் உள்ளது. ஏனெனில், இறைவனுக்குப் புகழ் பாட அழைப்பு விடுத்த இறைவாக்கினர் எசாயா, "வெகுகாலமாய் நான் மௌனம் காத்துவந்தேன்; அமைதியாய் இருந்து என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்" என்று எடுத்துரைத்து அமைதி மற்றும் மௌனம் வழியாகவும் இறைப்புகழ் பாட வலியுறுத்தியுள்ளார்.

இன்னிசைக் கலைஞர்களுக்கான யூபிலி திருஅவையில் அண்மையில் சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு இன்றைய நம் நேர்காணலில் இசைவழி இறைப்பணி என்ற தலைப்பில் தனது இசைப்பணி பற்றியும் வாழ்வு பற்றியும் தனது கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் திருமதி விமலா ஆல்பர்ட். "இசைவழி இறைப்பணி" என்னும் அளப்பரிய பணியை, கத்தோலிக்க திரு அவைக்கு, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இருந்தே ஆற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு முத்தமிழ் வித்தகர் புலவர் பெருமான் திருமிகு. அய்யாத்துரை பாகவதர் அவர்களின் வழி வந்த நான்காவது தலைமுறையைச் சார்ந்தவர். சென்னையில் வசிக்கும் திருமதி. விமலா ஆல்பர்ட்,  அவர்களை இசைவழி இறைப்பணி குறித்த கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 மே 2025, 10:22