சிரியாவில் அனைவரும் மாண்புடன் வாழ்வதற்கான உரிமை மதிக்கப்பட
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
சிரியா நாட்டிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் அகற்றப்படும் என அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளது உண்மையாக வேண்டும் என்று அறிவித்துள்ள சிரியாவின் கிறிஸ்தவ சமூகம், அனைத்து மக்களும் மாண்புடன் வாழ்வதற்கான உரிமை மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அல்-ஆசாத் ஆட்சியின்போது அமெரிக்க ஐக்கிய நாட்டின் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டிருந்த சிரியா மக்கள், இப்புதிய அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளதாக அலெப்போ நகரின் அருள்பணி Georges Sabé கூறினார்.
இந்த அறிவிப்பு குறித்து மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது என்ற அருள்பணி சாபே அவர்கள், பொருளாதரத் தடை நீக்கலுக்கு பிரதிபலனாக அமெரிக்க ஐக்கிய நாடு சிரியாவிலிருந்து ஏதாவது எதிர்பார்க்கும் என்ற அச்சம் மக்களிடம் உள்ளதாகவும் கூறினார்.
இன்றைய நிலையில் சாலைகள், மருத்துவமனைகள் என்ற உள்கட்டுமானப் பணிகள் தொடரும் அதேவேளை, உறவுகள், மன்னிப்பு, நீதி என்ற வகையில் மனிதனைக் கட்டியெழுப்புவதும் இடம்பெற வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் அருள்பணி சாபே.
நாட்டில் சிறுபான்மை மத சமூகத்தின் நிலை குறித்தும் தெளிவுபடுத்தப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் அலெப்போவின் மாரினிஸ்ட் அருள்பணி சாபே.
சிரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அகற்றுவதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ள போதிலும், எப்போது அகற்றப்படும் என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை, ஏனெனில் இத்தடை அகற்றப்பட அமெரிக்க காங்கிரஸ் அவையின் வாக்கெடுப்பு ஒப்புதல் தேவைப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்