தடம் தந்த தகைமை : மன்னரிடம் அழைத்துச்செல்ல தானியேல் வேண்டல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அந்நாள்களில், அரசனுடைய காவலர்த் தலைவனாகிய அரியோக்கிடம் சென்று, அரசனிடம் கனவின் உட்பொருளை விளக்கிக்கூறத் தமக்குச் சில நாள் கெடு தருமாறு கேட்டுக்கொண்டார் தானியேல். அதன் பிறகு, அவர் வீட்டுக்குத் திரும்பிச் சென்று, அனனியா, மிசாவேல், அசரியா ஆகிய தோழர்களிடம் செய்தியைக் கூறினார். பாபிலோனிய ஞானிகளோடு அவரும் அவர்களுடைய தோழர்களும் கொல்லப்படாதிருக்க, விண்ணகக் கடவுள் கருணை கூர்ந்து அம் மறைபொருளை வெளிப்படுத்தியருள வேண்டுமென்று அவரை மன்றாடுமாறு அவர்களிடம் சொன்னார். அவ்வாறே அன்றிரவு கண்டகாட்சி ஒன்றில், தானியேலுக்கு அம்மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது. அப்பொழுது தானியேல் விண்ணகக் கடவுளை வாழ்த்திப் போற்றினார்.
பின்பு தானியேல், பாபிலோனிய ஞானிகளை அழிப்பதற்கு அரசனால் நியமிக்கப்பட்ட அரியோக்கிடம் போய், அவனை நோக்கி, “நீர் பாபிலோனிய ஞானிகளை அழிக்க வேண்டாம்; என்னை அரசர் முன்னிலைக்கு அழைத்துச் செல்லும்; நான் அரசரது கனவின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன்” என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்