MAP

படிப்பினைகள் வழங்கும் இயேசு படிப்பினைகள் வழங்கும் இயேசு  

தடம் தந்த தகைமை - மண்ணுலகில் தீ மூட்ட

இயேசு விரும்பிய சமூகம் அமைதியிலும், அன்பிலும், நீதியிலும், பரிவிலும், சமத்துவத்திலும், நிலைபெற்றதாக இருக்க வேண்டும். அவை யாவும் மேல்பூச்சாகாமல் இருக்க ஒரு சமூகப் புரட்டல் தேவை என்றுணர்ந்தார் அவர்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் (லூக் 12:49) என உரைத்தார் இயேசு.

மேலோட்டமாகப் பார்ப்பின், இவ்வார்த்தைகள் இயேசுவின் வாயிலிருந்து வந்தவையா எனக் கேட்டு ஆச்சரியப்படலாம். இயேசு ஆச்சரியங்களின் மனிதர்தாம். அவரது அகவுணர்வைப் புரிந்துகொண்டால் இவ்வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்துள்ளதைப் புரியலாம்.

இயேசு விரும்பிய சமூகம் அமைதியிலும், அன்பிலும், நீதியிலும், பரிவிலும், சமத்துவத்திலும், நிலைபெற்றதாக இருக்க வேண்டும். அவை யாவும் மேல்பூச்சாகாமல் இருக்க ஒரு சமூகப் புரட்டல் தேவை என்றுணர்ந்தார். அந்த அகத் தேடலின் தீக்கனலே இவ்வார்த்தைகள். நம்முள் 2 வித அமைதிகள் நிலவும். 1. திணிக்கப்பட்ட அமைதி : அதிகாரத்தைத் தக்க வைக்க அடக்குமுறைகளால், சமய - இன – மொழி உணர்வுகளால், சில சலுகைகளால், கொடூரத் தாக்குதல்களால், கடும் சட்டங்களால் ஒருவித அசமத்துவ அமைதியைச் செயற்கையாக்குதல். 2. இயல்பான அமைதி : எல்லாரும் எல்லாம் பெறுதலால், சமத்துவப் பேணலால், மதிப்பு - மாண்பு - நீதி நிலைப்படுத்தலால், அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாக்கப்படுதலால் புலரும் நிலைத்த, இயற்கையான அமைதி. இந்த இயற்கையான அமைதி இல்லாமல் போனதால் நீதியினாலான அமைதியை உருவாக்கும் தீப்பிழம்பாவது நம் கடமை. நீதியற்ற அமைதி போலியானது.

இறைவா! நீதியினாலான அமைதியை எங்கும் நிலைப்படுத்த என்னைக் கருவியாக்கும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 மே 2025, 13:21