MAP

நல்ல பணியாளர் தலைவர் முன் நல்ல பணியாளர் தலைவர் முன் 

தடம் தந்த தகைமை – மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர்

எல்லாவற்றிலும் சிறியது - பெரியது, எல்லா இடங்களிலும் சிறியவர் - பெரியவர் எனப் பார்த்துப் பழகிப் போனது இவ்வுலகம். ஆனால் அப்பார்வையைத் துறந்து எல்லாரிலும் சமத்துவம் பேணும் சம பார்வையின் தேவையை இயேசு வலியுறுத்தினார்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? (லூக் 16:10&12) எனக் கேட்டார் இயேசு.

மானுட உறவின் நகர்வுகள் நம்பகத்தன்மையில்தான் நடைபெறுகின்றன. எல்லாவற்றிலும் சிறியது - பெரியது, எல்லா இடங்களிலும் சிறியவர் - பெரியவர் எனப் பார்த்துப் பழகிப் போனது இவ்வுலகம். ஆனால் அப்பார்வையைத் துறந்து எல்லாரிலும் சமத்துவம் பேணும் சம பார்வையின் தேவையை இயேசு வலியுறுத்தினார். அதுமட்டுமல்லாமல், சிறியது, சிறியவர், சிறுபொழுது, சிறு விஷயம் என எதையும் சிறுமைப்படுத்தாது வாழும் பெருயுக்தியையும் கற்பித்தவர் அவரே.

மிகச் சிறியவற்றில் செலுத்தும் கவனமே பெரியவற்றைச் சாதிக்கும் வழி. நேர்முகத் தேர்வு நடத்திக்கொண்டிருந்த நிறுவனத்தின் வரவேற்பறையில் வேலைக்காக நூறுக்கு மேற்பட்டோர் இருந்தனர். பங்கேற்று அறிவுத்திறனோடு பதிலளித்தவர்களை விடுத்து, காத்திருந்த நேரத்தில் அவ்வறையின் குப்பைகளைத் தொட்டியில் போட்டு, தினசரிகளை ஒழுங்குபடுத்தி, தேநீர்க் குவளைகளைக் கழுவி உரிய இடத்தில் சேர்த்த ஓர் ஏழை இளைஞரே அந்நிறுவன மேலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். நேர்மை: நம் இயல்பு, பழக்கம், மனவுறுதியின் ஒளிக்கதிர். சிறு காரியத்திலும் முழு அர்ப்பணம் - விழிப்புணர்வின் வெளிப்பாடு.

இறைவா! மிகச் சிறியதிலும், சிறியவரிலும் நேர்மையைக் கடைபிடிக்கும் நெஞ்சுறுதியைத் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 மே 2025, 09:13