MAP

2025.04.29 Patto - Covenant 2025.04.29 Patto - Covenant 

தடம் தந்த தகைமை – உடன்படிக்கைப்பேழை முன் இன்னிசைக் கருவிகள் மீட்டியவர்கள்

குருக்களான செபனியா, யோசபாத்து, நெத்தனியேல், அமாசாய், செக்கரியா, பெனாயா, எலியேசர் ஆகியோர் கடவுளுடைய பேழைக்கு முன்பாக எக்காளங்களை ஊதியவர்கள்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தாவீது, லேவியரின் தலைவர்களிடம் தங்கள் உறவின்முறையிலிருந்து தம்புரு, சுரமண்டலம், கைத்தாளம் ஆகிய கருவிகளை இசைத்து மகிழ்ச்சி ஒலி எழுப்பக்கூடிய பாடகரை நியமிக்கக் கட்டளையிட்டார். எனவே, லேவியர் யோவேலின் மகன் ஏமானையும், அவர் உறவின்முறையினருள் பெராக்கியாவின் புதல்வர் ஆசாபையும், மெராரியின் மைந்தரான அவர்கள் உறவின் முறையினருள் கூசயாவின் மகன் ஏத்தானையும், அவர்களோடு இரண்டாம் நிலையில், அவர்கள் உறவின்முறையினர் செக்கரியா, யகசியேல், செமிராமோத்து, எகியேல், உன்னி, எலியாபு, பெனாயா, மகசேயா, மத்தித்தியா, எலிப்பலேகு, மிக்னேயா மற்றும் வாயில் காவலரான ஓபேது, ஏதோம், எயியேல் ஆகியோரையும் நியமித்தனர்.

பாடகரான ஏமான், ஆசாபு, ஏத்தான் ஆகியோர் வெண்கலக் கைத்தாளங்களை ஒலிக்கச் செய்வார்கள். செக்கரியா, அசியேல், செமிரா மோத்து, எகியேல், உன்னி, எலியாபு, மகசேயா, பெனாயா, ஆகியோர் ‘அலமோத்து’ இசையில் தம்புருகளை வாசிப்பவர்கள். மத்தித்தியா, எலிப்பலேகு, மிக்னேயா, ஓபேது-ஏதோம், எயியேல், அசசியா ஆகியோர் உச்சத்தொனியில் சுரமண்டலங்கள் வாசிப்பவர்கள். லேவியர் தலைவர் கெனனியா இசையில் தேர்ச்சி பெற்றவராகையால், அவர் இசை கற்பிக்கவேண்டும். பெரக்கியாவும் எல்கானாவும் பேழையின் காவலர். குருக்களான செபனியா, யோசபாத்து, நெத்தனியேல், அமாசாய், செக்கரியா, பெனாயா, எலியேசர் ஆகியோர் கடவுளுடைய பேழைக்கு முன்பாக எக்காளங்களை ஊதியவர்கள். ஓபேது ஏதோமும், எகியாவும் பேழைக்குக் காவலாளர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 மே 2025, 11:53