MAP

அனைவரையும் தம்மை நோக்கி அழைக்கும் இயேசு அனைவரையும் தம்மை நோக்கி அழைக்கும் இயேசு 

தடம் தந்த தகைமை - அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லை

எதிர்காலம் நிச்சயமற்றது. எனவே ஒவ்வொரு நாளையும், இதுவே என் வாழ்வின் இறுதிநாள் எனக் கருதி உறுதியாக, உண்மையாக, உறவோடு உழைத்து வாழ்ந்தால் 'நாளை' என்ற சொல்லே நமக்குத் தேவை இல்லை.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும். (மத் 6:34)

காலம் கடவுளின் பெருங்கொடை. மனிதரால் எல்லாம் உருவாக்க முடியும் எனச் சொன்னாலும் காலத்தைப் படைக்க முடியாது. வாழ்வில் பெறும் ஒவ்வொரு பொழுதும் இறையன்பின் விழுது. அதை அணுஅணுவாக ரசித்து வாழ்வதே வாழ்விற்கழகு. இன்றையக் கடமைகள், பொறுப்புகள், வாய்ப்புகள், உறவுகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நாளை… நாளை என எண்ணிக் கொண்டிருந்தால் இன்று பெற்ற பொழுதுகளைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும், காலத்தை மீண்டும் உயிர்பெற்றெழச் செய்ய முடியாது.

அவ்வாறே, நம் முன்னிருக்கும் உடனடிப் பணிகளைத் தொடாமல், நாளை பார்க்கலாம், இன்னொரு நாள் செய்யலாம் எனத் தள்ளிப்போடுவது நம்மையே நாம் விழத்தாட்டுவது போலாகும். எதிர்காலம் நிச்சயமற்றது. எனவே ஒவ்வொரு நாளையும், இதுவே என் வாழ்வின் இறுதிநாள் எனக் கருதி உறுதியாக, உண்மையாக, உறவோடு உழைத்து வாழ்ந்தால் 'நாளை' என்ற சொல்லே நமக்குத் தேவை இல்லை. வலிமையைவிட பொறுமையும் நேரமும் மிக வலிமையானவை.

இறைவா! உம்மிலிருந்து ஊற்றெடுப்பதே காலம் எனும் நதி. அந்நதியில் 'இன்று', 'இப்பொழுது' எனும் படகில் பயணிக்கும் மனம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 மே 2025, 13:41