தடம் தந்த தகைமை - தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள், (மத் 7:7) என மொழிந்தார் இயேசு.
பிறப்பு முதல் இறப்புவரை வாழ்வில் தேடிக்கொண்டே இருப்பவர் மனிதர். ஆனால் எதைத் தேடுகிறார் என்பதே கேள்வி. தேட வேண்டியதை அதற்குரிய இடத்தில், அதற்குரிய ஆளிடம், அதற்குரிய சூழலில், இலக்கோடு தேடுதலே முறையானத் தேடல். தேடலில் தேவை முனைப்பு. அத்தேடலில் தெளிவுகள் கிடைத்தாலும் அதன் ஊடாக இன்னும் தேடுதலே சரியான விடைக்கான வழி. எனவே தேடுவோம், தேடலற்ற வாழ்வு தேவையற்ற வாழ்வு.
தேடலில் ஈடுபடும் பலர் ஓர் ஆபத்தைத் தேடிப் பிடிப்பதும் உண்டு. எதை எதையோ, யார் யாரையோ தேடித் தேடி இறுதியில் தன்னைத் தொலைத்து நிற்பர். எல்லாத் தேடல்களின் முடிவும் முடிவற்றதாகவே முடியும். எனவே, தன்னைத் தேடுவதும், தன்னுள் குடிவாழும் இறைமையைத் தேடுவதுமே நல்ல தேடல், தேவையான தேடலும் கூட. அந்தத் தேடலைப் பணிவோடு தொடர்ந்தால் தெய்வம் நம் கண்களின் முன்னே. கடவுள் நம்மைத் தேடி நம் வீட்டுக்கு வருகின்றார். நாம்தான் வீட்டுக்குள் இருப்பதில்லை.
இறைவா! தேவையானவற்றை மட்டும் தேடிப் பிடித்து, அவற்றை உம் தாளிலே சரணாக்கத் தேவையான சக்தி தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்