MAP

விளிம்பு நிலை மக்களுடன் ஆயர் Aurelio Gazzera. விளிம்பு நிலை மக்களுடன் ஆயர் Aurelio Gazzera. 

ஒதுக்கப்பட்ட மக்கள் மேல் கவனம் செலுத்தியவர் திருத்தந்தை பிரான்சிஸ்

2015ஆம் ஆண்டு மத்திய ஆப்ரிக்காவிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அமைதிக்கான விருப்பம் அத்திருத்தூதுப் பயணத்தில் தெளிவாக வெளிப்பட்டது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மத்திய ஆப்ரிக்க குடியரசு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தக் கடன்பட்டிருக்கின்றது என்றும், நம்மைச் சுற்றிலும் இருக்கும் பின்தங்கிய மற்றும் ஒதுக்கப்பட்ட மக்கள் வாழும் நாடுகள் மேல் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகமாக வலியுறுத்தியவர் அவர் என்றும் எடுத்துரைத்தார் ஆயர் Aurelio Gazzera

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2015ஆம் ஆண்டு மத்திய ஆப்ரிக்க குடியரசு நாடுகளுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தை நினைவுகூர்ந்து தனது அனுபவங்களையும் பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்தின் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் bangassou மறைமாவட்ட இணை ஆயர் Aurelio Gazzera.

மத்திய ஆப்ரிக்காவின் பாங்கி பகுதியில் உள்ள நிலத்தில் உள்ள bangassou மறைமாவட்ட இணை ஆயர் அவர்கள் 34 ஆண்டுகளாக அங்கு கார்மலேட் சபை மறைப்பணியாளராகப் பணியாற்றி வருகின்றார். 2015- ஆம் ஆண்டு மத்திய ஆப்ரிக்காவிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அமைதிக்கான விருப்பம் அப்பயணத்தில் தெளிவாக வெளிப்பட்டது என்றும் பகிர்ந்துள்ளார்.

போர் மற்றும் வன்முறை நிறைந்த சூழலில் திருத்தந்தை எங்களை சந்திக்க வருகின்றார் என்ற செய்தியானது நம்பக்கூடிய ஒன்றாக தங்களுக்கு இல்லை என்றும், இருப்பினும் புனிதக் கதவினை திறந்து வைத்து நம்பிக்கை மற்றும் அன்பின் கதவைத் திறந்து வைத்த திருத்தந்தையின் செயல் மிகவும் நெகிழ்வை ஏற்படுத்தியது என்றும் பகிர்ந்துகொண்டார் ஆயர் அவுரேலியோ.

ஐக்கிய நாடுகள் அவைக்கும், திருத்தந்தையின் வருகைக்கு எதிராக கடைசி நிமிடம் வரை அறிவுறுத்திய பல்வேறு நாடுகளுக்கும் பதிலடி கொடுப்பது போல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணம் அமைந்தது என்றும், இலட்சக் கணக்கான மக்கள் கலந்துகொண்ட திருப்பலிக் கொண்டாட்டமானது மிகவும் அழகாக எளிமையாக பொருளுள்ள விதத்தில் இருந்தது என்றும் எடுத்துரைத்தார் ஆயர் அவுரேலியோ.

பாங்குயி பகுதியை உலகத்தின் ஆன்மீக நகரம் என்று திருத்தந்தை அவர்கள் எடுத்துரைத்தது குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட ஆயர் அவுரேலியோ அவர்கள், போரினால் மக்கள் வெளிப்படையாக தெருக்களில் வர முடியாத சூழலில், திருத்தந்தையின் வருகையின்போது, மக்கள் இயல்பாக இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் மோட்டார்களிலும் ஒலிகளை எழுப்பிக்கொண்டு செல்வது மாற்றம் ஒன்று உருவாகிவிட்டது என்பதை வெளிப்படுத்தியது என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 மே 2025, 11:48