MAP

புதிய கோவில் புனிதப்படுத்தும் நிகழ்வு புதிய கோவில் புனிதப்படுத்தும் நிகழ்வு  

தாய்லாந்திலுள்ள மே சேம் மாவட்டத்தில் புனிதப்படுத்தப்பட்ட புதிய கோவில்!

தாய்லாந்தின் சியாங் மாயில் உள்ள மே சேம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் புதிய கோவில், இப்பகுதியில் உள்ள பூர்வகுடி கத்தோலிக்க சமூகங்களின் வலிமை, ஒன்றிப்பு மற்றும் வளர்ச்சியைக் குறிக்கிறது : ஃபீதேஸ் செய்தி நிறுவனம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஏப்ரல் 5, கடந்த சனிக்கிழமையன்று, தாய்லாந்தின் சியாங் மாயில் உள்ள மே சேம் மாவட்டத்தில் இடம்பெற்ற புதிய கோவில்  புனிதப்படுத்தப்பட்ட விழா ஒன்றில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் கலந்து கொண்டனர் என்று கூறியுள்ளது ஃபீதேஸ் செய்தி நிறுவனம்.

பா ஃபாங் கிராமத்தில் இருந்த முந்தைய கோவில், வளர்ந்து வரும் விசுவாசிகளின் எண்ணிக்கைக்கு மிகவும் சிறியதாக இருந்ததன் காரணமாகவும், இதனால் பலர் வேலை அல்லது கல்விக்காக மே சேமுக்கு குடிபெயர்ந்ததன் காரணமாகவும் இங்கு இந்தப் புதிய கோவில் கட்டப்பட்டுப் புனிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தப் புதிய கோவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் பணியாற்றி வரும் மீட்பர் துறவு சபையினரால் புனிதப்படுத்தப்பட்டுள்ளது என்று மேலும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.

மேலும் இந்நிகழ்வு உள்ளூர் கத்தோலிக்கச் சமூகத்தின் வளர்ச்சியிலும், பூர்வகுடி மக்களுக்கு அக்கறையுடன் மேய்ப்புப் பணி ஆற்றுவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பிலும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளதைக் குறிக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தித் தொகுப்பு.

இந்தப் பணித்தளத்தில் தற்போது மூன்று பங்குகள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன என்று உரைக்கும் அச்செய்திக் குறிப்பு, இவ்விழாவிற்குப் பேராயர் பிரான்சிஸ் சேவியர் வீரா அர்போண்ட்ரதானா மற்றும் பிற முக்கிய மத மற்றும் உள்ளூர் தலைவர்கள் தலைமை தாங்கினர் என்றும் கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஏப்ரல் 2025, 12:20