நலவாழ்வு மற்றும் அறநெறிகளில் நோய்த்தொற்றுப் பாதிப்புகளை ஏற்பது அவசியம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உரோமையில் உள்ள ஆஸ்திரேலியக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தால் (SACRU) ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கம் ஒன்றில், நோய்த்தொற்றால் ஏற்படும் பாதிப்பு என்பது ஒரு வரம்பாக அல்ல, ஒரு வலிமையானதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்றதாக செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தங்கம் உலகெங்கிலும் உள்ள இளம் அறிஞர்களை ஒன்றிணைத்து, நோய்த்தொற்றுகளால் பாதிப்புக்குள்ளானதன் அறநெறிமுறை மற்றும் சமூகப் பரிமாணங்களை ஆராய்ந்து, நிறுவனங்களை மனித அனுபவத்தின் ஒரு முக்கிய அம்சமாக அங்கீகரிக்க வலியுறுத்திதாகவும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மரபணு சோதனை மற்றும் வாழ்க்கையின் இறுதிப் பராமரிப்புப் போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய இக்கருத்தங்கில் ஆஸ்திரேலியக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் வலையமைப்பில் உள்ள முனைவர் பட்ட மாணவர்களின் ஆராய்ச்சி இடம்பெற்றது என்றும், இது நோய்த்தொற்றுப் பாதிப்பின் மாற்றும் திறனை வலியுறுத்தியது என்றும் அச்செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கருத்தரங்கு இறையியல் மற்றும் குடிமையியல் தாக்கங்கள் குறித்தும் விவாதித்தது என்றும், நல்ல சமாரியன் மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் படிப்பினைகள் குறித்தும் குறிப்பிட்டதாகவும் எடுத்துக்காட்டியுள்ளது.
இக்கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றிய David Kirchhoffer அவர்கள், தொற்றுநோய்க்குப் பிந்தைய கல்வி ஆராய்ச்சியில், குறிப்பாக, கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களில் இந்த நோய்த்தொற்றுப் பாதிப்பு குறித்து மீண்டும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் என்றும் குறிப்பிடுகிறது அச்செய்திக் குறிப்பு.
நலவாழ்வுப் பராமரிப்பில் அறநெறிமுறைத் தெளிவின் முக்கியத்துவம் குறித்து Virginia Bourke அவர்கள் எடுத்துரைத்த அதேவேளையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடைய வளர்ச்சியில் நோய்த்தொற்றுப் பாதிப்புகளின் பங்கு குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர் என்றும் அச்செய்தி மேலும் உரைக்கின்றது.
இறுதியாக, பராமரிப்பாளர்கள் (caregivers) திறந்த மனதுடன் நோயாளர்களுக்கு செய்யும் பணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தனது உரையை நிறைவு செய்தார் இயேசு சபை அருள் பணியாளர் James Keenan.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்