புனித வாரத்தில் தேர்தல் வேட்பாளர்களை மனதில் நிறுத்திச் சிந்தியுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிலிப்பீன்ஸ் தலத்திருஅவையினர் மற்றும் குடிமைக் குழுக்கள், வரவிருக்கும் மே மாத இடைக்காலத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை இப்புனித வாரத்தில் தங்களின் மனங்களில் இருத்தி சிந்திக்குமாறு கிடாபவன் மறைமாவட்டத்தின் ஆயரும், அந்நாட்டிற்கான காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான ஆயர் ஜோஸ் கோலின் பகாஃபோரோ அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
குறிப்பாக, தேர்தல் தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் புனித வாரத்தை இதற்குரிய தருணமாகப் பயன்படுத்துமாறும் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார் ஆயர் பகாஃபோரோ.
அதேவேளையில், வேட்பாளர்கள் அனைவரும் தன்னலமற்ற பொது சேவைக்கான தங்கள் உறுதிப்பாட்டை புதுப்பித்து, தேர்தல் செயல்முறையின் நேர்மையை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார் ஆயர் பகாஃபோரோ.
மேலும் ஸ்பார்க் (spark) என்ற இளைஞர் குழுவும் அமைதியான மற்றும், அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், குறிப்பாக, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரானத் தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பாகுபாடுகளில் கவனம் செலுத்துவதை விமர்சித்துள்ளது.
Kontra Daya மற்றும் Vote Report PH போன்ற குழுக்கள் தேர்தல் மோசடி மற்றும் வன்முறை பற்றிய கவலைகளை அறிக்கையொன்றில் எடுத்துக்காட்டியுள்ள அதேவேளை, இதில் 10 உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் மற்றும் ரெட்-டேக்கிங், போலி செய்திகள் மற்றும் வாக்குகளை விலைகொடுத்து வாங்குதல் போன்ற 733 விதி மீறல்கள் பதிவாகியுள்ளன என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்