நெருக்கடிகள் மத்தியிலும் நம்பிக்கைக் கொள்ளுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் இடம்பெற்று வரும் வன்முறைகளுக்கு மத்தியில், குருத்து ஞாயிறன்று நிகழ்ந்த திருப்பலியின் போது ‘நம்பிக்கையை இழக்க வேண்டாம்’ என்று விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டார் பியூடெம்போ-பெனியின் ஆயர் மெல்கிசெதெக் சிகுலி பலுகு.
வடக்கு கிவுவில் மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது உடனிருப்ப வெளிப்படுத்திய ஆயர் பலுகு அவர்கள், கிறிஸ்தவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், ‘இறுதியில் தீமை வெற்றிபெறாது, நன்மையே வெற்றிபெறும்’ என்றும் வலியுறுத்திக் கூறினார்.
தெற்கு கிவுவில், சீரற்ற வன்முறை காரணமாக, கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படைகள் இரண்டையும் கண்டு பொதுமக்கள் பெரிதும் அச்சமடைகின்றனர் என்றும், அங்கு நெருக்கடிகள் இருந்தபோதிலும், தலத்திருஅவைத் தொடர்ந்து செயல்பட்டு பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவளித்து வருகின்றது என்றும் உரைத்தார் ஆயர் பலுகு.
கோமாவை M23 கிளர்ச்சிக் குழு தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள நிலையில், அங்கு நிகழ்ந்த அண்மைய மோதல்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர் என்றும், அரசு ஆதரவு வாசலெண்டோ போராளிகள் நகரின் சில பகுதிகளை மீண்டும் கைப்பற்ற முயன்றபோது மோதல் தொடங்கியதாவும் கூறப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்