MAP

பாகிஸ்தானில் ஆப்கான் அகதிகள் பாகிஸ்தானில் ஆப்கான் அகதிகள்  (AFP or licensors)

சான் எஜிதியோ குழுவால் 700 ஆப்கான் அகதிகள் இத்தாலிக்குள் நுழைவர்

700 ஆப்கான் அகதிகளை இத்தாலிக்குள் வரவேற்கும் அனுமதி கிட்டியுள்ளதாக தெரிவிக்கும் சான் எஜிதியோ அமைப்பு, இதுவரை 8200 ஆப்கான் அகதிகள் ஐரோப்பாவில் குடியேற உதவியுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இத்தாலிய அமைச்சகங்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் வழி 700 ஆப்கான் அகதிகளை இத்தாலிக்குள் தங்கள் மனிதாபிமான திட்டங்கள் வழி வரவேற்று உதவ உள்ளதாக இத்தாலியின் கத்தோலிக்க பிறரன்பு இயக்கமான சான் எஜிதியோ அமைப்பு அறிவித்துள்ளது.

இத்தாலிய அரசுடனும், இத்தாலியிலுள்ள பல உதவி அமைப்புக்களுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து 700 ஆப்கான் அகதிகளை இத்தாலிக்குள் வரவேற்கும் அனுமதி கிட்டியுள்ளதாக தெரிவிக்கும் சான் எஜிதியோ அமைப்பு, 2021ஆம் ஆண்டிலேயே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஆப்கான் மக்களுக்கு இச்செய்தி நம்பிக்கைத் தரும் ஒன்றாக உள்ளது என அறிவித்தார் இந்த கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் தலைவர் Marco Impagliazzo.

சான் எஜிதியோ குழுவால் அரசின் நிதியுதவியின்றி ஏற்று நடத்தப்படும் இந்த நிவாரணப் பணிகளுக்கு இத்தாலிய மக்கள் தராளமனத்துடன் உதவி வருகின்றனர்.

போர்களும் பதட்டநிலைகளும் அதிகரித்துவரும் இன்றைய சூழலில் மனிதாபிமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆப்கான் அகதிகளுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டிய கடமையை ஆற்றிவருகிறது இந்த பிறரன்பு அமைப்பு.

அரசுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஏற்கனவே 338 பேருக்கு உள்நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 362 பேர் வரும் ஜூலை மாதத்துக்குள் இத்தாலிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சான் எஜிதியோ அமைப்பு, 8200 ஆப்கான் அகதிகள் ஐரோப்பாவில் குடியேற உதவியுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 ஏப்ரல் 2025, 13:46