MAP

நெபுகத்னேசர் எருசலேமை முற்றுகையிடல் நெபுகத்னேசர் எருசலேமை முற்றுகையிடல் 

தடம் தந்த தகைமை : நெபுகத்னேசர் எருசலேமை முற்றுகையிடல்!

பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர், கடவுளுடைய கோவிலின் கலன்கள் சிலவற்றை சீனார் நாட்டிலிருந்த தன் தெய்வத்தின் கோவிலுக்கு எடுத்துச் சென்று அவற்றைத் தன் தெய்வத்திற்குரிய கருவூலத்தில் சேர்த்தான்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அன்பர்களே, தடம் தந்த தகைமை என்ற நமது விவிலியக் கதைப் பகுதியில் இதுவரை ரூத்தின் வாழ்வு குறித்து அறிந்து வந்தோம். இனி வரும் வாரங்களில் இறைவாக்கினர் தானியேலின் வரலாறு குறித்து அறிந்துகொள்வோம். ‘தானியேல்’ என்னும் இந்நூல் யூதர்கள் வேற்றினத்து மன்னனால் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டபோது எழுதப்பெற்றது. கொடுங்கோல் மன்னனை வீழ்த்தி இறைவன் தம் மக்களை மீண்டும் முன்னிருந்தவாறே சிறப்புறச் செய்வார் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இந்நூலில் எடுத்துக்காட்டுகளும் காட்சிகளும் கையாளப்பட்டுள்ளன. அதேவேளையில், தானியேலும் அவரது தோழர்களும் எந்தச் சூழ்நிலையிலும் நெறிதவறாது இறுதிவரை கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருந்ததையும் இந்நூல் நமக்கு எடுத்தியம்புகிறது. இப்போது நமது கதைப் பகுதியைத் தொடங்குவோம்.

யூதா அரசன் யோயாக்கிமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் எருசலேமுக்கு வந்து முற்றுகையிட்டான். தலைவராகிய ஆண்டவர் யூதா அரசனாகிய யோயாக்கிமையும் கடவுளுடைய கோவிலின் கலன்கள் சிலவற்றையும் அவனிடம் கையளித்தார். அவனும் அவற்றைச் சீனார் நாட்டிலிருந்த தன் தெய்வத்தின் கோவிலுக்கு எடுத்துச் சென்று அவற்றைத் தன் தெய்வத்திற்குரிய கருவூலத்தில் சேர்த்தான்..

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஏப்ரல் 2025, 10:27