தடம் தந்த தகைமை - எருசலேமில் அரசர் தாவீதின் செயல்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
தீர் மன்னன் ஈராம் அரசர் தாவீதிடம் தூதர்களையும் அவருக்கு ஓர் அரண்மணை கட்ட கேதுரு மரங்களையும் மற்றும் கொத்தனார் தச்சரையும் அனுப்பிவைத்தார். இதனால், ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் தம்மை அரசராக உறுதிப்படுத்தினார் என்றும் அவருடைய மக்களாகிய இஸ்ரயேலின் பொருட்டுத் தமது அரசை மிகவும் சிறந்தோங்கச் செய்தார் என்றும் தாவீது அரசர் அறிந்து கொண்டார். எருசலேமிலும் தாவீது பல பெண்களை மணம் செய்து கொண்டார். அவருக்கு இன்னும் புதல்வர், புதல்வியர் பலர் பிறந்தனர்.
தாவீது இஸ்ரயேல் முழுவதற்கும் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது, அவர்கள் அனைவரும் தாவீதைத் தேடிப்பிடிக்கும்படி வந்தனர். தாவீது அதை அறிந்து அவர்களை எதிர்க்கச் சென்றார். பெலிஸ்தியர் வந்து இரபாயிம் பள்ளத்தாக்கில் கொள்ளையிட்டனர். தாவீது கடவுளிடம், “நான் பெலிஸ்தியரை எதிர்த்துச் செல்லலாமா? அவர்களை என்கையில் ஒப்புவிப்பீரா?” என்று கேட்டார். ஆண்டவர் அவருக்குப் பதிலுரையாக “போ, அவர்களை உன் கையில் ஒப்புவிப்பேன்” என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்