MAP

தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் கிறிஸ்தவ சிறுபான்மையினர் (கோப்புப் படம்) தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் கிறிஸ்தவ சிறுபான்மையினர் (கோப்புப் படம்)  (AFP or licensors)

இந்தியாவில் 2 கத்தோலிக்க அருள்பணியாளர்கள்மீது தாக்குதல்!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தில் மார்ச் 31, திங்களன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம், கடுமையான மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களால் தூண்டப்பட்டு, மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஒரு பெரிய அளவிலான விரோதப் போக்கின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இரண்டு கத்தோலிக்க அருள்பணியாளர்களைத் தாக்கி, திருப்பயணிகளைத் துன்புறுத்திய தாக்குதல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஏப்ரல் 1, இச்செவ்வாய்க்கிழமையன்று, இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்ட காவல் தலைமையகத்திற்கு வெளியே 1,000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.

மதமாற்றக் குற்றச்சாட்டில் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பூர்வகுடி கிறிஸ்தவர்களுக்கு உதவ முயன்றதற்காக இவ்விரு அருள்பணியாளர்கள்மீதும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், ஒரு இந்து கும்பல் அவர்களைச் சூழ்ந்து கொண்டு, அவர்கள் கன்னத்தில் அறைந்து, கிறிஸ்தவ எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியது என்றும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் வகுப்புவாத முனைப்புகள் (polarization) மற்றும் மதச் சுதந்திரத்தின் மீதானத் தாக்குதல்கள் குறித்து கிறிஸ்தவச் சமூகம் பெரும் கவலைகளை எழுப்பியுள்ளது என்று கூறுகிறது அச்செய்தித் தொகுப்பு,

மதமாற்றக் குற்றச்சாட்டுகளை காவல்துறை மறுத்த போதிலும், இந்து சார்பு பாரதிய ஜனதா கட்சியால் நிர்வகிக்கப்படும் அம்மாநிலத்தில், கிறிஸ்தவர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது இச்செய்தி நிறுவனம். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஏப்ரல் 2025, 14:26