நமக்கு மீண்டும் ஒன்றிணைந்த சிரியா தேவை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சிரியாவின் மீள் ஒருங்கிணைப்புக்கான அவசியத்தையும், அனைத்துலகச் சமூகம் அமைதி முயற்சிகளுக்குப் பங்களிக்க வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தியுள்ளார் அலெப்போவிற்கான திருத்தந்தையின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஹன்னா ஜல்லூஃப்.
வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் இவ்வாறு வலியுறுத்திக் கூறியுள்ள ஆயர் ஜல்லூஃப் அவர்கள், சிரியாவில், குறிப்பாக கடலோர லதாகியா (Latakia) பகுதியில் இடம்பெற்று வரும் வன்முறை குறித்தும் மிகவும் விரிவாக விளக்கியுள்ளார்.
மேலும் முன்னாள் அரசுத் தலைவர் பஷார் அல்-அசாத்தின் அலவைட் (Alawite) இஸ்லாமிய அமைப்பின் ஆதரவாளர்களுக்கும் புதிய ஆட்சிக்கும் இடையிலான மோதல்களில் வெறும் 72 மணி நேரத்தில் 1,300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இதில் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும் உரைத்துள்ளார் ஆயர் ஜல்லூஃப்
அசாத்தின் இராணுவம் மற்றும் பாதுகாப்பில் பெரிதும் ஈடுபட்டுள்ள அலவைட் சமூகம், தாக்குதல்கள், கட்டாய இடம்பெயர்வு மற்றும் வீடுகள் எரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாகவும் இந்நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார் ஆயர் ஜல்லூஃப்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்