சிரியா தலத்திருஅவைத் தலைவர்களின் கூட்டு அறிக்கை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சிரியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்படும் வன்முறை, ஈவிரக்கமற்றதனம் மற்றும் கொலைகள் யாவும் அண்மையில் அதிகரித்து வருவதைக் கண்டித்து அதன் தலத்திருஅவைகளின் தலைவர்கள் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக ICN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அங்கு நிகழ்ந்து வரும் படுகொலைகளைக் கண்டித்துள்ளதுடன், அத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர்கள், வன்முறைக்கு எதிரான தங்களின் எதிர்ப்பையும் மனித மற்றும் தார்மீக விழுமியங்களுக்கான ஆதரவையும் வலியுறுத்தியுள்ளதாகவும் உரைக்கின்றது அச்செய்தி நிறுவனம்.
சிரியாவின் தலத்திருஅவைகள் அனைத்தும் தேசிய நல்லிணக்கத்தையும், சமமான குடியுரிமை மற்றும் கூட்டாண்மை அடிப்படையிலான ஒரு சமூகத்தை நிறுவுவதையும், பழிவாங்கலற்ற ஒரு சூழலையும் ஆதரிக்கின்றன என்று கூறியுள்ளதையும் அச்செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்