MAP

Pax Christi பணியாளர்கள் Pax Christi பணியாளர்கள் 

இஸ்ராயேலின் அமைதி ஒப்பந்த மீறல் குறித்து Pax Christi கண்டனம்

Gaza Stripக்குக்கு தெற்கேயுள்ள Rafahவின் மத்திய Shaboura பகுதியில் இஸ்ராயேல் நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 200 குழந்தைகள் உட்பட 591 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 1042 பேர் காயமடைந்துள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அமைதி ஒப்பந்தத்தை மீறியதன் வழியாக மரணங்களுக்கும் அழிவுக்கும் இஸ்ராயேல் காரணமாகியுள்ளது எனவும், அமைதி ஒப்பந்த மீறல் குறித்த அனைத்துலக சமுதாயத்தின் மௌனம் மேலும் வன்முறைகளுக்கு வழி வகுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது Pax Christi பிறரன்பு அமைப்பு.

அமைதி, மனித உரிமைகள் மதிக்கப்படுதல், நீதி மற்றும் ஒப்புரவிற்காக தொடர்ந்து உழைத்துவரும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பான Pax Christi,  அண்மை காசா தாக்குதல் குறித்து வெளியிட்ட அறிக்கையில், அமைதி ஒப்பந்த மீறல் வழி அப்பாவி மக்களின் துயர்களுக்கு இஸ்ராயேல் காரணமாகியுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளது.

அமைதி ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மதிக்க வேண்டும், இதனை கண்காணிக்க அனைத்துலக சமுதாயத்திற்கு இருக்கும் பொறுப்புணர்வு போன்றவைகளையும் சுட்டிக்காட்டிய இக்கத்தோலிக்க அமைப்பு, பாலஸ்தீனப் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும், வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும், அனைவரின் மனித உரிமைகளும் மதிக்கப்பட புதிய அர்ப்பணத்தை கைக்கொள்ளல் போன்றவைகளுக்கும் அழைப்பு விடுத்தது.

காசாவின் நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, Gaza Stripக்குக்கு தெற்கேயுள்ள Rafahவின் மத்திய Shaboura பகுதியில் இஸ்ராயேல் நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 200 குழந்தைகள் உட்பட 591 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 1042 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 மார்ச் 2025, 12:15